India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் 1958-ன் படி சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல் விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 37 கடைகள் மற்றும் நிறு வனங்கள், 40 உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 77 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது. இந்நிறுவனங்கள் மீது சம்பளபட்டு வாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

விருதுநகர் மக்களே.. EMERGENCY நேரத்துல உங்க ஊரு GOVT HOSPITALக்கு போகும் போதே கால் பண்ணி அங்க தாமதம் ஏற்படாம ஒரு உயிரை காப்பாத்துங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
தலைமை மருத்துவமனை, விருதுநகர் – 04562242722
அருப்புக்கோட்டை – 04566220264
இராஜபாளையம் – 04563221301
காரியாபட்டி – 04566255130
சாத்தூர் – 04562260215
சிவகாசி – 04562220301
திருச்சுழி – 04566282141
ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260220

விருதுநகர் இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <

விருதுநகரில் எங்கெல்லாம் விநாயகர் சிலை கரைக்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விருதுநகர் – கல்கிடங்கு
திருவில்லிபுத்தூர் – திருவண்ணாமலை கோனகிரி குளம்
அருப்புக்கோட்டை – பந்தல்குடி பெரியகண்மாய்
கிருஷ்ணன்கோவில் – இராமச்சந்திராபுரம் கண்மாய்
சிவகாசி – தெய்வாணை நகர் கிணறு
இராஜபாளையம் – வடுகவூரணி
வத்திராயிருப்பு, கூமாபட்டி – கூமாபட்டி பெரியகுளம் கண்மாய்
ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளம் – ஆலங்குளம் குவாரி

சிவகாசியில் அடுத்தடுத்து நடந்துள்ள 3 கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த 12-ம் தேதி நேருஜி நகரில் கணேஷ் பாண்டி என்ற இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 13-ம் தேதி எம்.புதுப்பட்டி பகுதியில் தர்மராஜ் (21) காட்டுப்பகுதிக்குள் கொலை செய்யப்பட்டார். 14-ம் தேதி மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த சுந்தர மகாலிங்கம் கொலை செய்து கண்மாயில் புதைக்கப்பட்டுள்ளார்.

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தீபாவளிக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல்வேறு வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பட்டாசு, அச்சகத்திற்கு பெயர் பெற்ற சிவகாசியில் உள்ள தொழிலதிபர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் வரி குறைப்பு முறை எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் 50,925 முதல் 96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள்<

இந்திய கடற்படையில், டிரேட்ஸ்மேன் பணிக்கு 1,226 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்டுகிறது. 10ம் வகுப்பு அல்லது ITI படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 13.08.2025 முதல் 02.09.2025ம் தேதிக்குள் இந்த <

விருதுநகர் மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை ஆகஸ்ட் 17ம் தேதி இறுதிநாள் என்பதால் இந்த <

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடி மாத கடைசி
வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.