India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாரப்பத்தில் இன்று தவெக வின் மாநாடு நடைபெற உள்ள நிலையில் இதில் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மாநாட்டு பகுதியின் அருகில் உள்ள ஆவியூரில் உள்ள கடைகளில் மாநாட்டிற்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி தேவையான உபகரணங்களை வாங்குவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளை மறுஅறிவிப்பு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள் , சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுளவர்கள் <

தவெக மாநாட்டை முன்னிட்டு இன்று போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை – மதுரை மார்க்கமாக விருதுநகர் செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாகவும், விருதுநகர் செல்லும் பொதுமக்கள் ராம்நாடு ரிங்ரோடு, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்லலாம். மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு அருப்புக்கோட்ட நகருக்குள் செல்ல அனுமதி இல்லை.

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆத்திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேர 18 வயது முதல் 30 வயது உடையவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர் தாட்கோ இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மதுரையில் நாளை தமிழக வெற்றி கழத்தின் 2 வது மாநில மாநாடு பாரப்பத்தியில் நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள எலியார்றுபத்தி , வலையங்குளம், காரியாபட்டி இந்த இடங்களில் நாளை நடைபெறும் மாநாட்டினால் மதுரை-தூத்துக்குடி சாலையில் நெரிசலுக்கு வாய்ப்புள்ளது.இதனால் அந்த இடத்தை சுற்றியுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவை தனியார் பள்ளிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விருதுநகர் மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி (B.E/M.E உட்பட) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <

விருதுநகர் மக்களே; ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 Clerk காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் இங்கே கிளிக் செய்து ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2025. தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.24,050 – ரூ.64480/- வரை சம்பளம் வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க

சிவகாசி பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. பட்டாசு ஆடைகளில் ஏற்படும் விபத்தை தடுக்க தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 2024 ஜூலை 1 முதல் 2025 மார்ச் வரை பட்டாசு ஆலைகளில் 3056 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முரண்பாடுகள் இருந்த 746 தொழிற்சாலை நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடும் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 85 ஆலைகளில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் 2025-26 ஆம் ஆண்டு நிதியாண்டில், நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடி நிதி, குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ.350 கோடி நிதியை விரைந்து வழங்கிட ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதனை இன்று கனிமொழியுடன் இணைந்து திருச்சுழி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.