India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவி அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தை மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்கமன்னார் எழுந்தருளுவது வழக்கம். இந்நிலையில் தை மாத ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் நல்லதங்காள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் நல்லதங்காள் சிலையை சேதப்படுத்தி உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.இதனையடுத்து அப்பகுதி மக்கள் கோயிலுக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோசமிட்டனர்.பின்னர் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சிவகாசியிலிருந்து வெம்பக்கோட்டை செல்லும் சாலையில் இன்று இரவு சுற்றுலா பேருந்தும் சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சிவகாமி புரத்தைச் சேர்ந்த கார்த்திக் குமார் (30) பலத்த காயமடைந்து சுய நினைவை இழந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிந்து விசாரணை.
விருதுநகர் பாத்திமா நகரில் நர்சரி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கு கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஓசுரை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி ஆசிரியைகளுக்கான வளர் இளம் பருவ உளவியல் பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஜெயசிலன் துவக்கி வைத்தார். இதில் மென்ஸ்ட்ரூபீ டியா காமிக் புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், நமது மாவட்டத்தில் ஆண்டுதோறும் 200-300 வரையிலான குழந்தை திருமண புகார்கள் பதிவு செய்யப் படுகின்றன. 19 வயதிற்குள் தாய்மை பேறு அடையும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 700 – 800 வரை இருக்கிறது என்றார்.
ஒவ்வொரு மாதமும் 4வது சனிக்கிழமை பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டும் என தீர்மானித்து நீர்நிலைகள், நகர் & கிராமப்புறங்களிலும் பிளாஸ்டிக்கை அகற்றும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை தொடங்கி உள்ளோம்; இது ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிட மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை தொடங்கி உள்ளோம். தமிழகம் முழுவதும் இந்த பணியை துவக்கி வைக்கும் விதமாக விருதுநகரில் தொடங்கி வைத்துள்ளோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்
76 வது குடியரசு தின விழா 2025 முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நாளை காலை 8:05 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தேசியக் கொடியினை ஏற்றி வைக்க உள்ளார். குடியரசு தின விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு குடியரசு தின விழாவை சிறப்பிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) விருதுநகர் மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.
சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை, தென்காசி, சேலம், ஈரோடு, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருச்சியை சேர்ந்த சையது அமீர்(27) என்பவரை விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் பதுங்கியிருந்த போது தென்காசி போலீசார் கைது செய்துள்ளனர். மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.