Virudunagar

News January 30, 2025

கல்லூரி மாணவனுக்கு ஐகோர்ட் நூதன தண்டனை

image

கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த வழக்கில் கைதான விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவனுக்கு 3 வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவகாசியில் உள்ள அறிவுசார் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கிய மதுரை ஐகோர்ட். மாணவனின் தந்தை தாக்கல் செய்த மனு மீது நூதன முறையில் தண்டனை.

News January 30, 2025

விருதுநகர் மாவட்டம் புத்தகத்தை வெளியிட்ட அமைச்சர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஜன.29) விருதுநகர் மாவட்டம் ஒரு கண்ணோட்டம் ஒரு வரலாற்று பயணம் 1800-1950 புத்தகத்தினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் முன்னிலையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News January 29, 2025

முத்திரைத் தீர்வையை செலுத்தி ஆவணத்தை விடுவிக்கலாம்

image

விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் இந்திய முத்திரைச் சட்டம் 1899, வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இனங்களை, சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் தங்கள் ஆவணத்திற்குண்டான குறைவு முத்திரை தீர்வையை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் செலுத்தி ஆவணத்தை விடுவித்து கொள்ளலாம். மார்ச் 31 வரை வருவாய் மாவட்டம்தோறும் சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 29, 2025

விருதுநகரில் ரூ.3.00 லட்சம் மானியம் அறிவிப்பு

image

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகம் துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்களுக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும். அதன்படி விருதுநகரில் மருந்தகம் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் <>(இங்கே Click செய்து)<<>> ஜன.31 க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.*நண்பர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்

News January 29, 2025

விருதுநகரில் மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப்போட்டிகள்

image

தமிழ்மொழிக்கான பங்களிப்பை நினைவுகூரும் வகையில் பிப்.13 அன்று விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இலக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பார்த்தசாரதி, இராஜநாராயணன், கு.அழகிரிசாமி ஆகிய இலக்கிய ஆளுமைகள் குறித்து பிப்.6 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல்பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்பட உள்ளது.

News January 29, 2025

சிவகாசி மாநகராட்சியில் 49% வரி வசூல்

image

சிவகாசி மாநகராட்சியில் சொத்து வரி, வணிகவரி, தொழில் வரி, குப்பை, குடிநீர் வரி என ஆண்டுக்கு 36 கோடி வசூலாகிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான வரி வசூல் இதுவரை 17 கோடி 91 லட்சம் ரூபாய் வரை அதாவது 49% வசூலாகி உள்ளதாகவும் மீதமுள்ள 51% வரியை வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் காலதாமதமின்றி வரி செலுத்த அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News January 29, 2025

பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர்கள் மீது வழக்கு

image

வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டியில் ஆர்.எஸ்.ஆர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று இரவு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை தரைமட்டமானது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வெம்பக்கோட்டை போலீசார் ஆலையின் உரிமையாளர்களான சண்முகையா (60), அவரது மகன் ஜெய்சங்கர் (40) ஆகிய இருவர் மீது அஜாக்கரதையாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 29, 2025

ஆட்சியரின் இன்றைய நிகழ்ச்சி நிரல்

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கடம்பன்குளம், கிழவனேரி மற்றும் மாங்குளம் பகுதிகளில் இன்று (ஜன.29) விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 29, 2025

காரியாபட்டியில் மாவட்ட அளவிலான காய்கறிகள் திருவிழா

image

காரியாபட்டியில் உள்ள சேது பொறியியல் கல்லூரியில் வேளாண்மை – உழவர்சந்தை சார்பில் மாவட்ட அளவிலான காய்கறிகள் திருவிழா இன்று(ஜன.29) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்கும் இவ்விழாவில் வேளாண்மை பல்கலை கழக விஞ்ஞானிகள், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் சகோதரதுறை அதிகாரிகள் கலந்து கொண்டு தொழில்நிட்ப உறையாற்ற உள்ளனர். எனவே விவசாயிகள் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம். SHARE IT

News January 28, 2025

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

image

வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டியில் சண்முகையா என்பவருக்கு சொந்தமான ஆர்.எஸ்.ஆர் பட்டாசு ஆலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று பணி முடிந்து செல்லும்போது மிஞ்சிய பேன்சி ரக பட்டாசு ரசாயன கலவையை தயாரிப்பு அறையில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். வேதியியல் மாற்றத்தால் அவை வெடித்து சிதறியதில் ஒரு அறை சேதமானது. தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

error: Content is protected !!