India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வெம்பக்கோட்டை பகுதியில் சட்டவிரோத பட்டாசு குறித்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுப்பிரமணியபுரம் பஸ்நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரின் சாக்குப்பையை போலீசார் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட சரவெடி இருந்தது தெரியவந்தது. அதில் ராமகிருஷ்ணன் (48), கண்ணன் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

சிவகாசியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நகரமைப்பு அனுமதி பெறாமல் மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் கட்டப்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள் உட்பட 27 கட்டடங்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் வரி செலுத்தாவிடில் 27 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க முடிவு செய்துள்ளனர்.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் படிப்புகளான எலும்பியல் டெக்னீஷியன் பாடப்பிரிவிற்கு 3 காலியிடங்களும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பாடப்பிரிவிற்கு 8 காலியிடங்கள் என மொத்தம் 11 காலியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மையத்தில் பெற்று செப்.12 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகளுக்கு நலவாரியத்தின் மூலம் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் www.tnuwwb.tn.gov.in மூலம் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர்களிடமிருந்து விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.tntourismawardscom என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இணையவழி மூலமாக செப்.15 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 73977-15688 என்ற எண்ணில் அழைக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10-ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள்<

ஆன்லைன் பட்டாசு விற்பனை குறித்து விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கு தொடர்ந்தார். அதில் அன்லைன் பட்டாசு விற்பனை குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தது. ஆன்லைன் பட்டாசு விற்பனை செய்வது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் சூடுபிடித்துள்ளது. இதனிடையே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வடிவிலான பட்டாசுகள் அறிமுகப்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தர்பூசணி வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தத்துருவமாக தர்பூசணி போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்டாசுகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் பிரதாப் மான்சிங் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நாரணாபுரம் புதூரை சேர்ந்த முருகன் மனைவி காயத்ரி என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் அவர் பேப்பர் கேப்ஸ் என்ற பட்டாசை பாக்கெட் செய்த போது திடீரென உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயத்ரிக்கு தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகள், மதுபான உரிமஸ்தலங்களை நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபியான நாளை ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவை மீறி செயல்படும் மதுபான தலங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.