Virudunagar

News February 19, 2025

விருதுநகர் கலெக்டருக்கு ஆதரவாக போஸ்டர்

image

தமிழ் புலிகள் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில்,“விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலனின் நேர்மையான அரசு பணியை எதிர்த்து கடந்த ஏழு நாட்களாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை வேண்டும்; பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும்; இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 19, 2025

அறுவடை இயந்திரங்களின் விபரம் உழவன் செயலியில் பதிவேற்றம்

image

விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கு தனியார் நெல் அறுவடை இயந்திரங்களில் பெல்ட் வகை இயந்திரங்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.2600, டயர் வகைகளுக்கு ரூ.1800 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டாரம், அருகாமை மாவட்டத்திலுள்ள இயந்திரங்களின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு இயந்திரங்களை பயன்படுத்தலாம். இயந்திரங்களின் விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

News February 18, 2025

மதுபான கடையில் நடந்த கொலை வழக்கில் 4 பேர் கைது 

image

சிவகாசி சித்துராஜபுரத்தைச் சேர்ந்த கூலிதொழிலாளியான மாயன் ஸ்ரீவில்லிபுத்தூர் பாரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து நகர் போலீசார் விசாரணையில் மாயன் கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில், பாரின் உரிமையாளர் பரமன்(62), மான்சிங்ராஜா(41), போஸ்(58), அருள்அசோக் (43) ஆகிய நான்கு பேரை ஸ்ரீவில்லிபுத்தூர நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 18, 2025

கனிமவள காவலரை என ஆட்சியருக்கு ஆதரவாக போஸ்டர்

image

விருதுநகர் மாவட்டம் தோணுகால் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தண்டியனேந்தல் பேருந்து நிறுத்தம் பின்புறம் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கப்பட்ட கிரானைட் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கனிம வள காவலரை மாவட்ட ஆட்சியருக்கு ஆதரவாக வினோத போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சாத்தூர் அருகே கனிமவளக் கொள்ளை தடுக்க தவறிய ஏழு பேரை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

News February 18, 2025

வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

image

சாத்தூர் அருகே கனிமவளக் கொள்ளையை தடுக்க தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் உள்ளிட்ட 7 பேரை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினரை கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News February 18, 2025

ஸ்ரீவி கொலை வழக்கில் நான்கு பேரை பிடித்து விசாரணை

image

ஸ்ரீவி.வடகரை பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் திருமுக்குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். இந்த இறப்பு நிகழ்ச்சிக்காக சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் மாயன் (27) என்பவர் வந்திருந்தார். இவர் நேற்று மாலை சங்கூரணி பகுதியில் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஸ்ரீவி நகர் போலீஸார் வழக்கு பதிந்து 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

News February 18, 2025

ராஜேந்திரபாலாஜி மீது சிபிஐ வழக்கு

image

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுமார் 33 பேரிடம் ஆனிவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் ஸ்ரீவி நீதி மன்றத்தில் கடந்த ஜன.9 இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட்ட நிலையில் ராஜேந்திரபாலாஜி, விஜயநல்லதம்பி, மாரியப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த நிலையில் விரைவில் விசாரணை தொடங்க உள்ளது.

News February 18, 2025

ஸ்ரீவியில்,துக்கம் வீட்டுக்கு வந்தவர் கொலையா?

image

ஸ்ரீவி. ரைட்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன்.இவர் திருமுக்குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானார்.இந்த இறப்பு நிகழ்ச்சிக்காக சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் மாயன் (24) என்பவர் வந்திருந்தார்.இவர் நேற்று மாலை சங்கூரணி பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.உடலை மீட்டு ஸ்ரீவி. நகர் போலீஸார் கொலை செய்யப்பட்டாரா என சிலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

News February 17, 2025

வினாடி வினா போட்டியில் பங்கேற்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசு, மக்கள் செய்தி தொடர்பு துறை சார்பில் லவ்டிஎன் வினாடிவினா போட்டி 17.02.25 அன்று நடக்கிறது. தமிழ்நாடு திட்டங்களால் பயன் பெற்ற மக்களின் அன்பையும், மனநிலையையும் அறியும் விதமாகச் X, Instagram, Facebook, WhatsApp, YouTube போன்ற சமூக ஊடகங்களில் போட்டிகள் நடத்தப்படும்.வெற்றிபெறும் நடத்தப்படும்.வெற்றிபெறும் அரசு சார்பில் பரிசு,பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.

News February 17, 2025

விருதுநகரில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மினி பஸ்களை இயக்க உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை ஆன்லைன் மூலம் ரூ.1600 செலுத்தி பெற்று அதனை பூர்த்தி செய்து அதனை உரிய சான்றுகளுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 28.02.2025- க்குள் நேரில் சமர்ப்பிக்கலாம்.

error: Content is protected !!