India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த <

சிவகாசி பகுதியை சேர்ந்த கருத்தபாண்டி அவரது குடும்பத்திற்கு பணம் தராமல் உறவினர்களுக்கு செலவு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இவரது மகன் சுதாகர் கருத்தப்பாண்டியின் உறவினர்களான சந்தோஷ், சந்தியா ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சந்தோஷ், சந்தியா உள்ளிட்ட 4 பேர் சுதாகரை மீண்டும் அரிவாளால் தாக்கினர். கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற செப். 19ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. முகாமில் 20 க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிறுவனங்களில் 737 காலிப்பணியிடங்கள் உள்ளன. 15,000 – 50,000 வரை சம்பளம் வழங்கப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு <

மாநிலத்திலேயே அதிக உடல் உறுப்புகள் தானம் பெற்ற மருத்துவமனைகளில் விருதுநகர் அரசு மருத்துவமனை கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனை கல்லூரிகளில் விருதுநகர் அரசு மருத்துவமனை கல்லூரி உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது. மேலும் கடந்த ஆண்டு உடல் உறுப்பு தானம் இங்கிருந்து வழங்கப்பட்டதில் ஏராளமான நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஆகஸ்ட் மாதம் வரை பட்டாசு ஆலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிறிய அளவில் விதிமீறல் இருந்த 741 ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விதிமுறையை மீறியதாக 85 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் மா.கருப்பசாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்த தகவலை பெற்றுள்ளார்.

ராஜபாளையத்தை சேர்ந்த சின்ன குருசாமி மகன் சிவா 25, கட்டட தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவர் டூவீலரில் நேற்று மதியம் 1:30 மணிக்கு ராஜபாளையம் சென்றுவிட்டு எஸ். ராமலிங்கபுரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே கோதை நாச்சியார்புரம் விலக்கிற்கு முன் அடையாளம் தெரியாத வாகனம் பின்னால் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

விருதுநகர் மக்களே தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இங்கே<

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் பாலகுமார் என்பவர் தன்னுடைய நிலம் மற்றும் மற்றொருவரின் நிலத்தையும் குத்தகைக்கு எடுத்து கடனை வாங்கி விவசாயம் பார்த்து வந்துள்ளார். விவசாயம் சரிவர இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டள்ளது. இதனால் கடனை கட்ட முடியாததால் மன உளைச்சலில் இருந்த பாலகுமார் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் கருமாதி மடம் எம்.ஜி.ஆர்.,சிலை அமைந்துள்ள பகுதியில் நான்கு புறங்களில் இருந்து ரோடுகள் சந்திக்கின்றன. விருதுநகரில் இருந்து கலெக்டர் அலுவலகம், சிவகாசி ரோட்டில் இருந்து அருப்புக்கோட்டை பாலம் ஆகிய ரோடுகளில் தினசரி ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர்.ஆனால் இந்த சிக்னல் 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் செயல்பாட்டிற்கு கொண்டு வராததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.