Virudunagar

News September 16, 2024

தமிழ்நாடு நிதி அமைச்சரின் இன்றைய நிகழ்ச்சி

image

தமிழ்நாடு நிதி மின்சாரம் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசின் இன்றைய நிகழ்ச்சி நிரல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை விருதுநகர் மாவட்டம் வரலொட்டி வடக்குவாச் செல்வி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா, கட்சி நிர்வாகிகளின் திருமண விழா, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக அமைச்சர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News September 16, 2024

பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கு மேல் திருட்டு

image

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மண்டபசாலையில் கமுதியை சேர்ந்த சர்க்கரை என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரிடம் பங்க் கடை ஊழியரான பிரவின்ராஜ் பல நாட்களாக கைவரிசை காட்டியுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில், இதுவரை ரூ.2,14,500 ரொக்கப்பணத்தை திருடியது அம்பலமானது. இதையடுத்து நேற்று(செப்.15) எம்.ரெட்டியாபட்டி போலீசார் பிரவீன்ராஜை கைது செய்தனர்.

News September 16, 2024

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது

image

வெம்பக்கோட்டை அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் போலீசார் நேற்று சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது ஜெயபாரதி பட்டாசு ஆலைக்கு பின்புறம் உள்ள முள்வேலி புதருக்குள் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த சிவகாசி அம்மன் கோவில் பட்டியை சேர்ந்த காளியப்பனை போலீசார் கைது செய்தனர். மேலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News September 16, 2024

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,358 வழக்குகளுக்கு தீர்வு

image

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை உள்பட 4369 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் சுமார் 2358 வழக்குகளுக்கு ரூ.14,75,82, 519 தீர்வு தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News September 15, 2024

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

image

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் செப்.15 முதல் செப்.18 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச்சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

News September 15, 2024

விருதுநகர் கல்லூரி நிகழ்வில் திரை பிரபலம்

image

விருதுநகர் மாவட்டம் செவல்பட்டியில் உள்ள பி.எஸ்.ஆர். கல்லூரியில் முதல் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் தாமு கலந்து கொண்டு பேசினார். அப்போது:- மாணவர்கள் கல்லூரி படிக்கும்போது தங்களது இலக்கை நிர்ணயம் செய்து அதற்கு ஏற்றவாறு பயணம் செய்ய வேண்டும். எதிர்வரும் சவால்களை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என நம்பிக்கையூட்டினார்.

News September 15, 2024

தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று (14.09.2024) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த கண்காணிப்பு பணி மற்றும் அடிப்படை வசதி குறித்தும் ஆய்வு செய்தார்.

News September 15, 2024

ஸ்ரீதிருவேங்கடமுடையானுக்கு சிறப்பு பூஜை

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் ஆவணி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத திருவேங்கடமுடையான் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News September 14, 2024

பட்டாசு விற்பனையாளர்கள் வேண்டுகோள்

image

சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகனை நேரில் சந்தித்து வணிக பிரச்சனைகள் குறித்தும், தற்போது பல பட்டாசு கடைகளுக்கு உரிமம் புதுப்பித்து வழங்காததையும் எடுத்துக் கூறினார். எனவே பட்டாசு கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க சட்டமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News September 14, 2024

மாவட்ட ஆட்சியரின் நெகிழ்ச்சி பதிவு

image

சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஒரே அலுவலகத்தில் மகன் மென்பொருள் பொறியாளர், தந்தை தச்சர், வறுமை மற்றும் சமூக அந்தஸ்தில் உள்ள தலைமுறை இடைவெளிகளை கல்வி எவ்வாறு இணைக்கிறது என்பதை இந்த புகைப்படம் காட்டுகிறது” என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தனது X தளத்தில் தந்தை மகன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் புகைப்படத்தை பதிவு செய்து கருத்து தெரிவித்துள்ளார்.