India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சித்திரை திருநாளை முன்னிட்டு ஏப்.9,10 அன்று பெண்களுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற உள்ளது. கபடி போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 9488151214, 9994511966, 9865071770 என்ற எண்ணிலும் கையுந்து போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 9994160149, 9894693210 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.1.20 லட்சம் வழங்கப்படும்.
ஏழாயிரம்பண்ணை பகுதியில் போலீசார் நேற்று சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது ஸ்டாலின் பட்டாசு ஆலைக்கு பின்புறமாக சீமைக் கருவேல மரத்தடியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோத பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தாமோதரன் (30), திருநாவுக்கரசு (31) ஆகிய இருவரை கைது செய்து சுமார் ரூ.50,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் இன்று நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் பாஜகவை சேர்ந்த பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை மக்கள் நம்பப் போவதில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோவை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகாசி மாநகராட்சியில் தூய்மை பணியை ஒப்பந்தம் எடுத்த மதுரை ராம் அண்ட் கோ முறையாக பணி செய்யாததால் ரூ.37 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரை செய்த நகர் நல அலுவலர் சரோஜா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நேர்மையாக செயல்பட்ட நகர் நல அலுவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நாளை (மார்ச்.30) இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மொட்டை அடித்து வழிபடுவர். அம்மன் குதிரை வாகனத்தில் முப்பிடாரி அம்மன் கோவிலுக்கு வேட்டைக்கு செல்லும் நிகழ்வு நடைபெறும்.
சிவகாசியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காக போலீசார் சார்பில் நகரில் முக்கிய இடங்களில் 299 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக பிடிப்பதுடன், பழைய குற்றவாளிகளை அடையாளம் காணுதல், கண்காணிப்பு பணியை எளிதாக்க முடியும். இதேபோல் காரியாபட்டியில் 35, அருப்புக்கோட்டையில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச்.23) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் மக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் 2 முதல்வர்களை கொடுத்துள்ளது. காமராஜரை எல்லோருக்கும் தெரியும். பெரும்பான்மையானோருக்கு தெரியாதவர்தான் பி.எஸ்.குமாரசாமி ராஜா. ராஜப்பாளையத்தைச் சேர்ந்த இவர் 1898 ஆம் ஆண்டு பிறந்தார். இவர், சென்னை மாகாணத்தின் கடைசி முதல்வராகவும்(1959-60), சென்னை மாநிலத்தின் முதல் முதல்வராகவும்(1950-52) இருந்துள்ளார். இவரை பற்றி தெரிந்தால் கமெண்ட் பன்னுங்க. தெரியாத நண்பர்களுக்கு பகிரவும்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி கல்வி மாவட்டத்தில் 189 தேர்வு மையங்களிலும் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 168 பள்ளிகளிலும் என மொத்தம் 357 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் சிவகாசி கல்வி மாவட்டத்தில் 14,874 மாணவ மாணவிகளும், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 10,895 மாணவ மாணவிகளும் என மொத்தம் 25,769 பேர் எழுதுகின்றனர்.
சிவகாசி மாநகராட்சியில் சொத்துவரி, வணிகவரி உள்ளிட்ட வரி இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 25 கோடிக்கு வரி வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில் நேற்று வரை 96.5 சதவீதம் கூட வர முடியாத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நிர்வாக ரீதியான பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. கடந்த வரி வசூலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த சிவகாசி மாநகராட்சி, தற்போது 23வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.