India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் சிலர் இதுநாள் வரை ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விபரங்களை வழங்காமல் உள்ளனர். அவர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் வங்கிகளில் உடனே சமர்ப்பிக்க வேண்டும் என மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டையில் 10,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ 350 கோடியில் சிப்காட் அமைக்கப்படும் என கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் அறிந்திருந்தார். இதற்காக நிலங்களை தேர்வு செய்யும் பணி வருவாய் துறை மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளை விரைவு படுத்தி சிப்காட் அமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர், 4,379 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதில் சில குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி மாணிக்கம் தாகூர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி சதீஷ்குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 98 மையங்களில் பிளஸ் டூ பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் 10,363 மாணவர்கள், 11,861 மாணவிகள் என மொத்தம் 22,224 மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 10,115 மாணவர்கள், 11,689 மாணவிகள் என மொத்தம் 21,804 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 420 பேர் தேர்வு எழுதவில்லை.
ஸ்ரீவி அருகே உள்ள இடையபொட்டல்பட்டி ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன்(64). இவர் ஸ்ரீவி – ராஜபாளையம் ரயில்வே தண்டவாளம் பகுதியில் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார் என போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே போலீசாரின் விசாரணையில், அவர் செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக ஸ்ரீவி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என நவ.10ல் முதல்வர் அறிவித்தார். இந்த திட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், 2024 நவ.10க்கு முன், பின் நிகழ்ந்த விபத்துக்களில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள், நவ.10 அன்று 18 வயது நிறைவடையாதவர்களாகவும் இருந்தால் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 98659 58876, 93447 45064 எண்களை அணுகலாம் *ஷேர்
விருதுநகர் மாவட்ட தொழில் மையம் சார்பாக அருப்புக்கோட்டை புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் கலையரங்கத்தில் வரும் 5 ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. கடன் உதவி தேவைப்படும் தொழில் முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் சிவகாசி வட்டம், திருத்தங்கல் சீ.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் இன்று (03.03.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வு மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடிதம் ஒன்றை கைப்பட எழுதியுள்ளார். அதில், மாணவச் செல்வங்களே, இது முக்கியமான தேர்வு. அச்சமும் அவநம்பிக்கையும் நமக்கு அவசியமற்றவை. கவனமும் உழைப்பும் மட்டுமே வெற்றிக்கு அடிப்படை. 3 மணி நேரத்தையும் தேர்வறையில் சிறப்பாக பயன்படுத்துங்கள். முடிந்ததை முழுமையாகச் செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது.இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன.விருதுநகர் மாவட்டத்திற்கு 46 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். <
Sorry, no posts matched your criteria.