Virudunagar

News April 6, 2025

இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் பலி

image

விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் தனியார் மில் அருகே வந்து கொண்டிருந்தபோது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பிரபாகரன் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News April 5, 2025

ஆட்சியர் தலைமையில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

News April 5, 2025

சதுரகிரியில் மலையேற பக்தர்களுக்கு தடை

image

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆண்டு முழுவதும் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி வியாழக்கிழமை முதல் அமல் படுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை.

News April 5, 2025

விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சிறிய அளவிலான இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். 25,000 வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் தகவலுக்கு இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்வும் . *வேலை தேடுபவர்களுக்கு ஷேர் பண்ணவும்*

News April 5, 2025

கோவில் அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு

image

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் நேற்று (ஏப்ரல்-04) போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது தவ முனிஸ்வரர் கோயில் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தங்கேஸ்வரன் (29), தங்கப்பாண்டி (30) ஆகிய இருவரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்து அங்கிருந்த சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

News April 4, 2025

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தினசரி வழிபாடு

image

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தினசரி மலையேறிச் சென்று சதுரகிரி சதுரகிரியில் வழிபாடு நடத்த நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சதுரகிரி மலை அடிவாரமான வத்திராயிருப்பு தாணிப்பாறை நுழைவு வாயிலில் காலை 6 முதல் 10 மணி வரை தினசரி அனுமதிக்கப்படுவர். மாலை 4 மணிக்குள் அடிவாரம் திரும்பி வரவேண்டும்.பக்தர்களை அனுமதிப்பது குறித்து முன் அறிவிப்பு இல்லாததால் முதல் நாளான நேற்று ஒரு சில பக்தர்களை வந்திருந்தனர்.

News April 4, 2025

ஆண்டாள், ரங்கமன்னார் நாச்சியார்பட்டிக்கு புறப்பாடு

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக நேற்று (ஏப்.3) கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மண்டபங்களில் எழுந்தருளல் நடைபெறும். இரண்டாம் நாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நாச்சியார்பட்டிக்கு புறப்பட்டனர். ஏப்ரல் 11 ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

News April 4, 2025

விருதுநகரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 4, 2025

விருதுநகரில் அக்காவை கொன்ற தம்பி கைது

image

விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் திருமணி(45). இவருடைய தம்பி பெரியசாமி(42). கடந்த சில நாட்களுக்கு முன்பு இடப் பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பெரியசாமி அக்கா திருமணியை வெட்டி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் பெரியசாமியை நேற்று கைது செய்தனர்.

News April 4, 2025

விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

விருதுநகரில் உள்ள பிரபல ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் கம்பெனியில் 100 டெய்லர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <>கிளிக் <<>>செய்து மே.31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு செய்தியை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!