India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர், கள்ளிக்குடி வடகம்பட்டியை சேர்ந்த 80 வயது முதியவர் டிச. 12அன்று கனமழையில் வீட்டுக்கூரை சாய்ந்து இவர் தலையில் விழுந்தததில், மூளையில் உடைந்த ஓட்டுத்துண்டு குத்திக்கொண்டு இருந்தது சி.டி ஸ்கேன் அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவர்கள் முதியவர் மூளையில் குத்தி நின்ற ஓட்டுத்துண்டை அகற்றி சாதனை படைத்தனர்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் நாளை (டிச.21) விருதுநகர் மாவட்ட நிர்வாகம் & வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைக்கவுள்ளார். இந்த முகாமில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால் இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று கணிதத் துறையின் சார்பில் கணிதமேதை ராமானுஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கணித மேதை ராமானுஜர் திரு உருவப் படத்திற்கு கல்லூரி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கணிதமேதை ராமானுஜம் ஒரு பார்வை எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் சத்துணவு மையத்தை கடந்த 11 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஆய்வு மேற்கொண்டபோது சத்துணவு மையம் மூடப்பட்டிருந்தது. விசாரணையில் சத்துணவு அமைப்பாளா் கணபதி, சமையலா் குருலட்சுமி, உதவியாளா் அம்சவள்ளி ஆகியோா் பணிக்கு வராமல் இருந்தது தெரியவர சத்துணவு அமைப்பாளா் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பவித்ரா வேடசத்திரத்திற்கு பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய யோகேஷ் குமார் விருதுநகருக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய துணை காவல் கண்காணிப்பாளராக யோகேஷ் குமார் நேற்று(டிச.19) பொறுப்பேற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் 51% நிதி பங்களிப்பு, மாநில அரசின் 49 சதவீத நிதி பங்களிப்பில் 1052 ஏக்கரில் சிப்காட் நிலத்தில் ஒருங்கிணைந்த பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் வேலிகள் இல்லாததால் இங்கு இரவோடு இரவாக அனுமதியின்றி 10க்கும் மேற்பட்ட மரங்களை நபர்கள் வெட்டி கடத்தி வருகின்றனர்.

திருச்சுழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையால் புகையிலை, சட்டவிரோத மதுவிற்பனை உட்பட குற்ற செயல்கள் தொடர்பாக 120 க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு செய்து 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோத புகையிலை விற்பனை தொடர்பாக 40 க்கும் மேற்பட்ட வழக்குகளில் 20 கடைகளுக்கு திருச்சுழி போலீசார் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

சிவகாசியில் நிலத்தடி நீர் ஆதாரமாக செங்குளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாய் நிரம்பினால் நகரின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உள்ளது. நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இக்கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசடையும் நிலை உள்ளதால் கழிவுநீர் கலப்பதை தடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் – ஜோகில்பட்டி இடையே குண்டாற்றின் குறுக்கே ரூ.9.89 கோடி மதிப்பில் பாலம் கட்ட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை அன்னல் அம்பேத்காரை நாடாளுமன்றத்தில் இழிவாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதில் திமுக கட்சியின் ஒன்றிய,நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.