India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவி அருகே கிருஷ்ணன்கோவிலைச் சேர்ந்த நாகசுரேஷ், மணைவி விஜயலட்சுமி, மகள் முத்தீஸ்வரி(6) ஆகியோர் திருப்பூர் ஊத்துக்குளியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 3 பேரும் 3 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விருதுநகர் எஸ்.எஸ்.கே கிராண்ட் கந்தசாமி திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் தங்கராஜ், செல்வமணி தலைமையில் நடைபெற உள்ளது என தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று (செப்.24) கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (செப்.24) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் டி என் ரைட்ஸ் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் செயல்படுத்திட ஏதுவாக வாகன நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் கடந்த 19ம் தேதி லட்சுமி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் என்ற தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 90 சதவீத தீக்காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குருமூர்த்தி (19) என்ற தொழிலாளி இன்று (செப்.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுரு. இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பாதுகாவலராக பணியில் உள்ளார். இந்நிலையில் நேற்று வார்டில் சண்டையிட்டவர்களை வெளியே செல்ல கூறினார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ் குமார், முனீஸ்வரன், முத்துக்குமார், மகாலிங்கம் ஆகிய 4 பேர் சேர்ந்து பாதுகாவலர் விஜயகுருவை தாக்கினர். இது தொடர்பாக கிழக்கு போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.
சாத்தூர் அருகே வன்னிமடை வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமிக்கும் (50).இதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரகுமார் என்பவருக்கும் சொத்து தகராறு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருப்பசாமியை மகேந்திரகுமார், வரதராஜன், பாண்டிமுருகன், முத்துமாரி, பாண்டியம்மாள், பாண்டீஸ்வரி ஆகிய 6 பேரும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து கருப்பசாமி புகாரியின் பேரில் இருக்கன்குடி போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகரை சேர்ந்த அப்துல் மஜீத் (22) கேளம்பாக்கம் அருகே செங்கல்மால் பகுதியில் டிங்கரிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நண்பர்கள் மோகன் (20), சகாயராஜ் (20) ,விமல் ராஜ் (20), ராகுல் (24) ,செட் (23) ,ஸ்ரீகாந்த் (20) ,அபிலேஷ் (22), ரூபன் (18) ஆகியோர் கஞ்சா விற்ற 10,000 பணத்தை திரும்பி தராததால் அப்துல் அஜீசை கொலை செய்து ஏரிக்கரையில் புதைத்தனர். எட்டு பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்
விருதுநகர் தெப்பம் பஜாரில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மேலும் தீபாவளி 2024 விற்பனை குறியீடாக ரூ.55 லட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.
மானாமதுரை – அருப்புக்கோட்டை – விருதுநகர் வழிதடத்தில் 121 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நாளை மறுநாள் காலை 9:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மானாமதுரை, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக தென்காசி ரயில் நிலையம் செல்ல உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் தண்டவாளம் அருகில் உள்ளவர்கள் கவனமாக இருக்க ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 10 குழிகள் தோண்டப்பட்டு அதில் ஏராளமான சங்கு வளையல்கள், கல்மணிகள், செப்புக்காசுகள், சுடுமண் முத்திரை, சூது பவளம் உள்பட 1,800 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது மேலும் 3 புதிய குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டி அந்த குழிகளும் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. புதிய குழிகளிலும் ஏராளமான தொல்பொருட்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.