India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று (செப்.27) மாலை 4 மணி அளவில் விருதுநகர் கந்தசாமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் வருகின்ற 29ம் தேதி விருதுநகர் வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று (செப்.27) மூன்றாவது புத்தகத் திருவிழா கோலாகலமாக துவங்குகிறது. புத்தகத் திருவிழாவில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் கவிஞர்கள் பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும் பல்வேறு துறை சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு ஊட்டச்சத்து திருவிழா மற்றும் விழிப்புணர்வு போட்டி விருதுநகர் யூனியன் அலுவலக வளாகத்தில் நேற்று (செப்.26) நடைபெற்றது. இதில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலிருந்து மகளிர் சுய உதவி குழுவினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் விருதுநகர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொண்டதில் 11 வீடுகளில் மின் திருட்டை கண்டுபிடித்து ரூ.10 லட்சத்து 87 ஆயிரத்து 190 அபராதம் விதித்தனர். மின் நுகர்வோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு சமரச தொகையாக ரூ.64 ஆயிரம் செலுத்தியதன் காரணமாக அவர்கள் மீது புகாரளிக்கவில்லை என அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செப்.26) முதல் அக்.1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள்(செப்.28) அன்று விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்கள், செப்.29 அன்று விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அகத்தாகுளம் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்காக சுமார் 900 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிற்கு நிலம் எடுக்கும் பணிக்காக அலுவலர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சிப்காட் தொழில் பூங்காவிற்கு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே கருப்பம்பட்டியில் உள்ள சிட்கோ தொழில்பேட்டையில் சிவகாசியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று (செப்.25) திடீரென எந்திரங்கள் உள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். தீ விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் கிழக்கு காவல் நிலையத்துக்கு அருகில் தற்காலிக செட்டில் செயல்பட்டு வந்த மேட்டூர் ஸ்பீடு பார்சல் அலுவலகத்தில் பட்டாசு பண்டல்கள் இறக்கும் போது எதிர்பாராத போது பண்டல்கள் ஒன்றுடன் ஒன்றாக உரசியதால் திடீரென பட்டாசுகள் வெடிக்க தொடங்கின.பின்னர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (செப்.25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்திய ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தால் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு வரும் 27ஆம் தேதி விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்வுக்கு தயாராக உள்ள ஆர்வலர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பட வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை, நரிக்குடி ,திருச்சுழி வழியாக தென்காசி வரை இன்று அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது சுமார் 121 கிமீ வேகத்தில் அதிவேக ரயில் இன்று காலை நரிக்குடி ரயில்வே நிலையத்தை கடந்து சென்றது.மேலும் இந்த வழித்தடம் 110 கி.மீ வேகத்தில் இயக்க தயார் நிலையில் இருக்கிறதா என சோதிப்பதாகவும், இதனால் எதிர்காலத்தில் ரயில் பயணங்களில் நேரத்தை குறைக்கும் என கூறினர்.
Sorry, no posts matched your criteria.