India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் கல்வித்துறை மற்றும் வனத்துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இளம் பசுமை ஆர்வலர் என்ற சிறப்பு பயிற்சி முகாம் வரும் 8ம் தேதி அன்று மாவட்டத்தில் 4 இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் 7904267235 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “வ உ சி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாளை விருதுநகர் ஸ்ரீ அம்பாள் கிராண்ட் அரங்கத்தில், “வ.உ.சி-யும் இலக்கியமும்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், கலை இலக்கிய ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் மூலம் விவசாயிகள் விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனி நபர் பட்டதாரிகள் தொழில் முனைவோராக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பயன் அடையலாம்” என தெரிவித்துள்ளார்.
விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டுக்கான தொழில் பிரிவுகளில் நேரடி செயற்கை மூலம் சேர 31.08.24 கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது ஒரு சில தொழில் பிரிவுகளில் 100% பயிற்சியாளர்கள் சேர்க்கை பூர்த்தி ஆகாத காரணத்தால் வரும் 30ஆம் தேதி வரை நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3 ம் கட்ட
அகழாய்வில் முழுமையான செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை சிதைந்த நிலையில் கட்டுமானம் கண்டறியப்பட்டு வந்த நிலையில் தற்போது முழுமையான கட்டுமான சுவர் கண்டறியப்பட்டுள்ளது.
முன்னோர்கள் தொழிற்கூடம் அமைத்து வசித்ததற்கான அடையாளமாக இந்த செங்கல் சுவர் அமைந்துள்ளதாக தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் 24 மணி நேரமும் தனக்கு வாட்ஸ் அப்பில் நேரிடையாக தகவல் அளிக்கலாம் என மாவட்ட எஸ்பி கண்ணன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். போதை பொருட்கள் விற்பனை மற்றும் சட்ட விரோத செயல்கள் குறித்து 24 மணி நேரமும் பொதுமக்கள் (99402 77199) இந்த வாட்சப் எண்ணில் தகவல் அளிக்கலாம். தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வேட்பு மனுவில்
உண்மை தகவல்களை மறைத்ததாக தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மாணிக்கம் தாகூர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்குகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறை பின்பற்றப்படவில்லை எனக்கூறி நான்கு வார காலத்திற்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பெண் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முருகேசன் என்பவர் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் இன்று தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான முருகேசனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரிடமிருந்து முருகேசன் தப்பி ஓட முயன்ற போது அவருக்கு கை முறிவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழக வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச,தேசிய போட்டிகளில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் செப்.30 க்குள் www.sdat.tn.gov.in என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.