India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி, விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி ஓய்வுபெற்ற நிலையில் கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றிய ஜெயசிங் விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையை ஒழிக்க வேண்டி மது விற்பனை செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர்களின் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1737 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 கடைகள், 43 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 107 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தேசிய விடுமுறை தினத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இதை மீறுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ள நிலையில் மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்தும் வகையில் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒன்பது ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆணையூர், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், நாரணாபுரம், பள்ளப்பட்டி உள்ளிட்ட 9 ஊராட்சிகளின் மக்கள் தொகை, ஊராட்சிகளின் எல்லை அளவு உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா நாளை (அக்.4) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதில் 5 ஆம் நாள் விழாவான அக்.8 கருட சேவையும், 9-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 10 ஆம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது .9-ம் நாளான 12-ம் தேதி பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.
கடந்த சில தினங்களாக நமது மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆட்சியர் பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி அதன் மூலம் பணம் கேட்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட மக்கள் போலியான முகநூல் அல்லது இணையவழி பணம் கேட்டால் யாரும் நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும், மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி சர்ச் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (26). இவரை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஊரணித் தெரு தனியார் தோப்பு பகுதியில் வைத்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த கந்தகுமார்(26), மாரீஸ்வரன்(24) மற்றும் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த கன்னிச்சாமி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பகுதியில் இன்று (அக்.2) டவுன் போலீசார் ஏ.எஸ்.பி மதிவாணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு சரக்கு வாகனங்களை மடக்கி சோதித்ததில் அதில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் கருந்திரி கடத்தப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து ரூ.3 லட்சம் மதிப்புடைய கருந்திரிகளை பறிமுதல் செய்த போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
ஸ்ரீவி அருகே திருவண்ணாமலை ஶ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இரண்டாவது வார சனிக்கிழமையை முன்னிட்டு கடந்த 28 ஆம் தேதி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கோயிலில் வைக்கப்பட்டிருந்த 8 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்து 428 காணிக்கை கிடைத்தது.
விருதுநகர் அருகே கூரைக்குண்டு கிழக்கு தெரு பகுதியைச் சார்ந்தவர் பாலமுருகன்(34). இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த சண்டியர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று சண்டியர் முனீஸ்வரன் மற்றும் நாகம்மாள் ஆகிய 3 பேர் பாலமுருகனை தகாத வார்த்தையால் பேசி அடித்து காயப்படுத்தி உள்ளனர். இது குறித்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.