Virudunagar

News September 11, 2024

அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு நாளை விசாரணை

image

கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2012 ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.பின்னர் இந்த வழக்கிலிருந்து 2022 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு நாளை ஸ்ரீவி.,மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

News September 11, 2024

அங்கன்வாடி மையத்தில் ஓவிய போட்டி

image

சிவகாசி அருகே சங்கரலிங்காபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் சிறார்களுக்கான ஓவியத்திறனை மேம்படுத்தும் ஓவியப்போட்டி இன்று நடைபெற்றது. சிறார்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் பல்வேறு விதமான ஓவியங்களை வரைந்து சிறார்கள் அசத்தினர். சிறந்த ஓவியங்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

News September 10, 2024

விருதுநகரில் 9 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் துவக்கம்

image

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 9 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு இன்று (செப்.10) தொடங்கி வைத்தனர். இதில், பயனாளிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

News September 10, 2024

கறவை மாடு வாங்க பயனாளிகளுக்கு அழைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டத்தை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்தபட்சமாக ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் வாங்க ரூபாய் 1,20,000, கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 10, 2024

ரூ.2.48 கோடியில் உயர்மட்ட பாலம்

image

சிவகாசி அருகே ஆமத்தூரிலிருந்து லட்சுமியாபுரம் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மழை காலங்களில் அடிக்கடி மூழ்குவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மேம்பாலம் அமைக்க மக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தற்போது ரூ.2.48 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி ஆய்வு செய்தார்.

News September 9, 2024

நலிந்த நிலையில் உள்ள வீரர்களுக்கு ஓய்வூதியம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விளையாட்டு துறையில் சர்வதேச தேசிய போட்டிகளில் வென்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழக முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 6000 வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் www. sdat.tn.gov.in என்ற தளத்தில் செப். 30 மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News September 9, 2024

தேர்தல் முடிந்தும்  துவங்கப்படாத படகு சவாரி

image

சிவகாசி பெரியகுளம் கண்மாயில் கடந்த மார்ச் மாதம் முதல் வார இறுதி நாட்களில் படகு சவாரி போக்குவரத்து திட்டம் துவங்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் அசோகன் ஏற்பாட்டில் துவங்கப்பட்ட இத்திட்டம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் தேர்தல் முடிவடைந்து 3 மாதங்களாகியும் இதுவரை படகு சவாரி திட்டம் துவங்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

News September 9, 2024

அதிமுக தொண்டர் மரணம் -எடப்பாடி இரங்கல்

image

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் சத்திரம் அண்ணா அ தி .மு .க கிளை கழக செயலாளராக பணியாற்றியவர் திரிசங்கு (வயது – 40.) இவர், சிறிது காலம் உடல் நலமில்லாமல் இருந்தார். இன்று காலை அவர் உடல் நிலையை மிகவும் மோசமானதால் சிகிக்சை பலனின்றி இறந்து போனார். அன்னாரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

News September 9, 2024

புதிய ஐபிஎஸ் அதிகாரி பொறுப்பு ஏற்பு

image

அருப்புக்கோட்டை டி.எஸ்.பி ஆக பணிபுரிந்து வந்த காயத்ரி கடந்த சில நாட்களுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மதிவாணன்(IPS) புதிய ஏ.எஸ்.பி ஆக பொறுப்பேற்பார் என‌ அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளராக மதிவாணன் ஐ.பி.எஸ் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

News September 9, 2024

விருதுநகரில் குறைந்து வரும் பருத்தி சாகுபடி

image

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 600 ஹெக்டேருக்கும் அதிகம் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது பருத்தி சாகுபடி செய்வதில் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். தொழிலாளர்கள் கூலி அதிகரிப்பு, இடுபொருட்கள் விலை உயர்வு போன்றவற்றின் காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. ஆனால் பருத்தியின் விலை குறைந்துள்ளது. இதனால் நடப்பாண்டில் பருத்தி சாகுபடி செய்வது சரிபாதியாக குறைந்து வருகிறது.

error: Content is protected !!