Virudunagar

News January 16, 2025

மிலிட்டரி கேண்டீன் மது பாட்டில் விற்பனை

image

ராஜபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் 50, முன்னாள் ராணுவ வீரர். இவர் தென்காசியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்த போது அங்கு மிலிட்டரி கேண்டீன் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக தென்காசி போலீசார் கைது செய்தனர். ராஜபாளையத்தில் உள்ள அவர் வீட்டில் சோதனை செய்தபோது அவரது மனைவி மணிமேகலை 42, யும் விற்றது தெரிந்தது.மதுவிலக்கு போலீசார் அவரையும் கைது செய்து வீட்டிலிருந்த 153 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 15, 2025

விருதுநகரில் மாநில அளவில் 2வது திருக்குறள் மாநாடு

image

விருதுநகர் மாவட்டத்தில் மாநில அளவிலான இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு 31.01.2025 மற்றும் 01.02.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான இந்த மாநாடு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மேற்குறிப்பிட்ட தேதியில் நடைபெற இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 14, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். பின்னர் அரசு ஊழியர்கள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய உடை அணிந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

News January 13, 2025

விருதுநகரில் இசையுடன் உணவுத் திருவிழா

image

விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருந்துடன் விருதுநகர் கார்னிவல் 2025 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழா ஜன.17, 18 அன்று நடைபெற உள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதேச உணவுகள், பொழுது போக்கு அம்சமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் யூ – டியூப் பிரபலங்கள், சூப்பர் சிங்கர்ஸ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.

News January 13, 2025

சொக்கநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

image

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோவில் அமைந்துள்ளது.‌ இந்த கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News January 12, 2025

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் கடந்த 31ஆம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் 6ஆம் நாளான இன்று காலை ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News January 12, 2025

 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் 1 பணியிடமும்(மாத ஊதியம் ரூ.27,804), சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூகப்பணியாளர்கள் 2 பணியிடங்களும்(மாத ஊதியம் ரூ.18536) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.virudhunagar.nic.in லிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜன.27 க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

News January 12, 2025

விருதுநகரில் நெடுந்தூர ஓட்ட போட்டி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விருதுநகர் மாவட்ட மேம்பாட்டு பிரிவு சார்பாக அறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் இடையே உடற்தகுதி கலாச்சாரம் புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி வளாகத்தில் துவங்கிய இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News January 12, 2025

பட்டாசு தொழிலாளர்களுக்கு பயிற்சி துவக்கம்

image

தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தால், பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபடுவது குறித்த பயிற்சி வகுப்பு வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது. 20 முதல் 24ஆம் தேதி வரையிலும், 27 முதல் 31-ஆம் தேதி வரையிலும் தினந்தோறும் காலை 10.15 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். *ஷேர்

News January 12, 2025

பல லட்சம் மதிப்பில் பட்டாசுகள் பறிமுதல்

image

சிவகாசி அருகே உசேன் காலனி பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக குடோன் ஒன்றில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து குடோன் உரிமையாளர்கள் வெங்கடேஷ் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!