India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பள்ளி மாணவ, மாணவியர்களின் திறன்களை ஊக்கப்படுத்தும் 150வது நிகழ்ச்சியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கில் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி வருகின்ற 28 .1. 2025 காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் திருமதி. முத்துச்செல்வி பங்கேற்கிறார் என மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 22.01.2025 முதல் 01.02.2025 வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 வரை நடைபெற உள்ளது. இதில் வேளாண் தொழில்நுட்ப விளக்கக் காட்சிகள், நவீன விவசாய தொழில்நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. இதில் அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடைந்திடுமாறு ஆட்சியர் ஜெயசீலன் ஜேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் NR IAS Academy இணைந்து நடத்தும் மாநில அளவிலான வினாடி வினா போட்டி இந்திய தேர்தல்கள் என்ற தலைப்பில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் 25ஆம் தேதி நடைபெறுகிறது. முன்பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 23.01.25. மேலும் விவரங்களுக்கு 9894429949. இந்தப் போட்டியில் குழுவாக மட்டுமே பங்கு பெற வேண்டும்.ஒரு குழுவிற்கு 2 நபர்கள்.

எம்ஜிஆர்-ன் 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையேற்று பொதுக் கூட்டத்தை நடத்தினார். இதில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதில், 2026 தேர்தலில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும் எனக் கூறினார். இதில் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. பல்வேறு மாநில அரசு தனது சொந்த நிதியை பயன்படுத்தி வருகிறது. மத்திய தமிழக அரசுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் கடன் சுமை அதிகரிக்கிறது. கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் 15% மட்டுமே நிதி பங்கீடு வழங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்ததை அடுத்து தென்மாவட்ட மக்கள் சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தூத்துக்குடி தாம்பரம் சிறப்பு ரயிலானது தூத்துக்குடியில் இருந்து வருகிற ஜன. 19 ஆம் தேதி பகல் 4.25 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் கோவில்பட்டு, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் ஜன.21 அன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவக் கல்லூரியில் ஜன.25 அன்று “இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான மாநில அளவிலான வினாடி- வினா போட்டி நடைபெறவுள்ளது. இதில் 16 வயதிற்கு மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் https://virudhunagar.nic.in/nvd-quiz-2025/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.

ராஜபாளையம் மாரியம்மன் கோயில் விழா திடல் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த தகராறில் கருப்பசாமி என்பவர் அடித்து கொல்லப்பட்டார். குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி அவரது உறவினர்கள் சாலைமறியல் செய்த நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் மங்காபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், செந்தில்குமார்(24), லோகேஷ்(22), ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகரில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 24.01.2025 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. காலை 11.00 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.