Villupuram

News January 7, 2026

விழுப்புரத்தில் பரபரப்பு – குளத்தில் மிதந்த சடலம்!

image

விழுப்புரம்: புளிச்சப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அகமத் கான். இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அகமத் கான் காணாமல் போனார். அதைத்தொடர்ந்து அவரது மகள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வீட்டின் அருகேயுள்ள குளத்தில் சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு வீரர்கள் தேடினர். அப்போது அகமத் கான் சடலமாக கிடைத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

விழுப்புரம்: மூதாட்டியை கொடூரமாக தாக்கிய பெண்கள்!

image

விழுப்புரம்: நாகல்பாக்கத்தைச் சேர்ந்தவர் குப்பு (60). இவர் தனது வீட்டின் அருகே குப்பையை தீ வைத்து எரித்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் முத்துலட்சுமி மற்றும் பரிமளா ஆகிய 2 பேரும் குப்புவை தகாத வார்த்தைகளால் திட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

விழுப்புரம் இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (ஜன.6) இன்று இரவு 11 மணி முதல் நாளை (ஜன.7) காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

News January 7, 2026

வானூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆட்சியர் ஆய்வு

image

வானூர் வட்டம் வானூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுவரும் கூடுதல் மருத்துவமனை கட்டடப்பணிகளை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (ஜன.06) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வானூர் வருவாய் வட்டாட்சியர் வித்யாதரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கலந்து கொண்டனர்.

News January 6, 2026

விழுப்புரத்தில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

விழுப்புரத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 6, 2026

விழுப்புரம்: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை! APPLY

image

விழுப்புரம் மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் மறக்காம SHARE பண்ணுங்க!

News January 6, 2026

விழுப்புரம்: அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி தலைமை தங்குகிறார். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்குவோம் என்ற முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியை (315-ஜ) நிறைவேற்ற வலியுறுத்தி இந்த மாநிலம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

News January 6, 2026

BREAKING: விழுப்புரத்திற்கு ORANGE ALERT!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் வரும் ஜன.9 தொடங்கி 10,11 அன்றும் மிக கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த தேதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜன.10க்கு மேல் விழுப்புரம் மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 6, 2026

விழுப்புரம்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

விழுப்புரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

விழுப்புரம் குறை கேட்பு கூட்டம் 571 மனுக்கள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைக்க கூட்டத்தில் 571 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்ட மாறுதல் ஆக்கிரமிப்பு அகற்றம், ஆதரவற்றோர் உதவித்தொகை ஆகிய மனுக்கள் உட்பட பல்வேறு துறை சார்ந்தவர்கள் பெறப்பட்டன கூட்டத்தில் ஆட்சியர் ஆர்டிஓ கலந்து கொண்டனர்.

error: Content is protected !!