Villupuram

News January 15, 2026

விழுப்புரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News January 15, 2026

விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 15, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் வழங்கும் முகாம் 07.01.2026 முதல் 31.01.2026 வரையிலான அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் நடைபெறும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் ஆனது ஆன்லைன் வழியாக பதிவு செய்யப்படுகிறது. இது தொடர்பான விவரம் 04146- 290543 -யை தொடர்பு கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News January 15, 2026

விழுப்புரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 15, 2026

விழுப்புரம்: கணவன் தொல்லையா? உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, விழுப்புரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 944930680-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 15, 2026

விழுப்புரம்: சுற்றுலா வந்த வாலிபர்களுக்கு ஏற்பட்ட சோகம்!

image

விழுப்புரம்: குன்றத்தூரிலிருந்து கேரளாவுக்குச் சுற்றுலாச் வந்த இளைஞர்களின் வேன், விழுப்புரம் அருகே இருவேல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில், முன்னாள் சென்ற வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிரவீன்குமார், கிஷோர், ஜெயப்ரகாஷ் உட்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 15, 2026

விழுப்புரத்தில் துணிகரம் – பூட்டிய வீட்டில் கொள்ளை!

image

விழுப்புரம்: பெரியார் நகரைச் சேர்ந்த நிர்மல் குமார், மலேசியாவில் தங்கி பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திரா பெரியார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில், இந்திரா தனது வீட்டை பூட்டிவிட்டு, நேற்று வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 15, 2026

விழுப்புரம்: காதலியிடம் மோசடி – காதலன் அதிரடி கைது!

image

திண்டிவனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் (27), கடலூரைச் சேர்ந்த வாலிபர் துரைராஜும் சென்னையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி துரைராஜ் ரூ.5 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். இந்நிலையில், திடீரென அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்த துரைராஜ் திருமணம் செய்யவும் மறுத்துள்ளார். இதுகுறித்த வழக்கில் போலீசார் துரைராஜை கைது செய்தனர்.

News January 15, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 14.01.2026 முதல் இரவு ரோந்து காவல்துறை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. DSP எம்.எஸ். ரூபன்குமார் தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். குற்றச்செயல்கள் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.

News January 14, 2026

விழுப்புரம்:தை முதல் அன்று செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

image

விழுப்புரம் மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*திருவாமாத்தூர் ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோவில்
*திருநாவலூரில் உள்ள ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் ஆலயம்
*மயிலம் முருகன் கோயில்
*மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!