Villupuram

News January 14, 2026

விழுப்புரத்தில் தீக்குளித்த பெண் உயிரிழப்பு!

image

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் பாலாமணி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த 22ம் தேதி மகேஸ்வரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 14, 2026

விழுப்புரம் இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது. DSP R.பிரகாஷ் தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி பகுதிகளுக்கான காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர தேவைகளில் நேரடியாக தொடர்புகொள்ளலாம். உதவி எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

News January 14, 2026

விழுப்புரம் இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது. DSP R.பிரகாஷ் தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி பகுதிகளுக்கான காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர தேவைகளில் நேரடியாக தொடர்புகொள்ளலாம். உதவி எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

News January 14, 2026

சமத்துவ பொங்கல் விழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டி

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இந்த பொங்கல் விழாவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஜெ.இ.பத்மஜா, ஆகியோர் பரிசுகளை இன்று (ஜன.13) வழங்கினார்.

News January 13, 2026

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.13) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஜெ.இ.பத்மஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன்,உட்பட பலர் உள்ளனர்.

News January 13, 2026

விழுப்புரம்:ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 13, 2026

மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (ஜன.13) நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் கலந்து கொண்டார்.

News January 13, 2026

விழுப்புரம் மக்களே ₹41,000 ஊதியத்தில் வங்கி வேலை!

image

விழுப்புரம் மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளமாக ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் <>இண்ட்பேங்க்<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு இந்த அறிய வாய்ப்பைப் பகிருங்கள்!

News January 13, 2026

விழுப்புரம்: குட்கா விற்பனை: போலீஸ் அதிரடி நடவடிக்கை

image

விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
இளமுருகன் தலைமையில் 9 தனிப்படையினர் கொண்ட 50 போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் சோதனை நடத்தினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக இன்று (ஜன.13) அதிரடி சோதனை நடத்தினர்.

News January 13, 2026

விழுப்புரம்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது பலரும் UPI மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலைப்பட வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையேல், Google Pay (18004190157), PhonePe (8068727374), Paytm (01204456456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தை ஈஸியாக திரும்பப் பெறலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!