India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செஞ்சி அடுத்த அனந்தபுரம் அருகே உள்ள உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மகள் தவச்செல்வி(26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்னரே கணவர் இறந்து விட்டார். இந்நிலையில், தாயுடன் வசித்து வந்த அவர், நேற்று முன் தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கீழ்பாதி மேம்பாலம் அருகே 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? போன்றவை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செஞ்சி அடுத்த திருவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நிலாம்பாள்(73). இவர், கடந்த ஜன.18ஆம் தேதி வீட்டில் விளக்கேற்றிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சேலையில் தீ பற்றி எரிந்தது. இதில், கடுமையான தீக் காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்கு சென்னை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனினி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் இன்று வெளியிடப்பட்டது. இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு உடனடியாக தொடர்புகொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, போக்குவரத்துத்துறை, சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.23) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 16-வது தேசிய வாக்காளர் தினத்தினை (ஜன.25) முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த வாக்காளர் தின தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.23) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தினகரன், இளமுருகன் ஆகியோர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பங்கேற்றனர். மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நேர்மையுடன் செயல்படுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
Sorry, no posts matched your criteria.