India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்ட மக்களே.., மாவட்டம் முழுவதும் இன்று(ஜன.23) கனமழை பெய்யக் கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளியே வேலைக்கு செல்வோர், மறக்காமல் குடை எடுக்கத் தவறாதீர். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் பயணித்த தனியார் பள்ளி வேனில் திடீரென ‘டமார்’ என சத்தம் கேட்டது. வேனுக்குள் இருந்த தீயணைப்பு சிலிண்டர் வெடித்ததால் இந்த சத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், வேனுக்குள் சில ரசாயன துகல்கள் பரவின. இதனால், மாணவர்கள் பெரும் அச்சத்திற்குள்ளானனர். நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

விழுப்புரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <

விழுப்புரத்தில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத்துறை அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. எலிசா பரிசோதனைகளுக்கு தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்திருக்கவும், மருத்துவமனைகளில் டெங்கு, சிக்கன்குனியாக்கென பிரத்யேக வார்டுகளை அமைக்கவும், நடமாடும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

விழுப்புரம்: வளவனூர், சிறுவந்தாடு பகுதியில் வளவனூர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த விக்ரமன், அரவிந்தன் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. இருவரையும் வளவனூர் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டல்களை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட மக்களே.., இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளில் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 12ஆவது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை எவரும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,400 முதல் சம்பள்ம வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

விழுப்புரம் மாவட்ட மக்களே.., இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளில் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 12ஆவது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை எவரும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,400 முதல் சம்பள்ம வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

விழுப்புரம்; திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். விவசாயக் கூலித் தொழிலாளியான இவரின் னைவி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சரவணனின் தாயார் அஞ்சம்மாள் கடந்த 10 நாட்களுக்கு முன் இறந்தார். இதனால் மனமுடைந்த சரவணன் நேற்று(ஜன.22) பிற்பகல் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று ஜன.22 திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதுடன்,மாதிரி வாக்கு செலுத்தும் முறையை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
Sorry, no posts matched your criteria.