India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் எலுமிச்சை பழ வியாபாரம் செய்து வந்த தனலட்சுமி (68), நேற்று வீட்டில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார், உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலைய மேலாளர் கணேஷ், புதன்கிழமை தீவனூர் – வெள்ளிமேடுபேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வடசிறுவளூர் பகுதியில் திடீரென சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்த கணேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில், (24.01.26) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய அட்டை கோருதல் போன்ற விண்ணப்பங்களை பொதுமக்கள் நேரில் வழங்கித் தீர்வு காணலாம். எனவே இதில் பொதுமக்கள் பங்குபெற்று பயபெற்றுக்கொள்ளவும்.

விக்கிரவாண்டி அருகே, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த காவ்யா (30) தினசரி மாத்திரை உட்கொண்டு வந்தார். நேற்று முன்தினம் மாத்திரை சாப்பிட்டு உறங்கியபோது வாயில் நுரை தள்ளி மயங்கினார். உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து உதவி பெறலாம்

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தங்கராஜ் லேஅவுட் கம்பன் நகர் பகுதியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு பணி நடைபெற்றது. இந்த ஆய்வு பணியில் பார்வையாளர் ஆஷிம் குமார் மோடி, மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (ஜன.22) ஆய்வு நடைபெற்றது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆஷிம் குமார் மோடி, ஆட்சியார் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் ஆகாஷ், உட்பட பலர்.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இதை ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.