Villupuram

News May 5, 2024

விக்கிரவாண்டி அருகே பக்தர்கள் தரிசனம்

image

விக்கிரவாண்டி வட்டம் பனையபுரம் கிராமத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட ஸ்தலம் ஸ்ரீ சத்யாம்பிகை சமேத நேத்திர தாராகேஸ்வரர் சிவாலயத்தில் இன்று பிரதோஷம் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு கிராமத்தில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். ஈஸ்வரன் பார்வதியும் கோவிலை வலம் வந்தனர். அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

News May 5, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரங்களை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அந்த ஸ்ட்ராங் ரூம் பகுதியில் உள்ள சிசிடி கேமராக்கள் சரிவர இயங்குகிறதா என மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

News May 5, 2024

10-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்

image

விழுப்புரம், கண்டாச்சிபுரம் பகுதியில் நேற்று 15 வயதுடைய சிறுமிக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொளப்பாக்கத்தைச் சேர்ந்த ஐயப்பன் (28) என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணகி மற்றும் மகளிர் காவல் துறையினர் மணமகன் ஐயப்பன் உட்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News May 5, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நீட் தேர்வு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே 5) நீட் தேர்வை மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் எம்பிபிஎஸ் டிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தமாக 5005 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மதியம் 2 மணிக்கு தொடங்கும் இத்தேர்வு மாலை 5: 20 வரை நடைபெறும். விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்பது தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 4, 2024

விழுப்புரம் வீடூர் அணை பற்றிய தகவல்!

image

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே அமைந்துள்ளது இந்த வீடூர் அணை. 1959 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை மறைந்த முதல்வர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இவ்வணையின் மொத்த நீளம் அகலம் முறையே 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும்.

News May 4, 2024

விழுப்புரத்தில் மஞ்சள் அலர்ட்

image

விழுப்புரம் மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News May 4, 2024

விழுப்புரத்தில் மஞ்சள் அலர்ட்

image

விழுப்புரம் மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News May 4, 2024

சிசிடிவி கேமராக்கள் மூலம் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை CCVT கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் இருந்தார்.

News May 4, 2024

சிகிச்சைக்கு வந்த மாணவியிடம் அத்துமீறிய டாக்டர் கைது

image

விழுப்புரத்தில் பிசியோதெரபி சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவியிடம் பிசியோதெரபி மருத்துவர் அத்துமீறி தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். இதையடுத்து மாணவி தரப்பில் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மருத்துவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறது.

News May 4, 2024

திரௌபதி அம்மன் கோவிலில் தீ மிதித்த பக்தர்கள்

image

மயிலம் அடுத்த வீடூர் கிராமத்தில் நேற்று (மே 3) தீமிதி திருவிழா நடைபெற்றது. வீடூர் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் பதினெட்டாம் நாள் பாரதப் போர் முடிந்து 19ஆம் நாள் அம்மன் கூந்தல் அள்ளி முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு ஏற்படுத்தப்பட்டிருந்த தீயில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இறங்கி அம்மனுக்கு வேண்டுதலை செலுத்தினர்.

error: Content is protected !!