India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவினங்கள் இறுதி செய்வது குறித்து ஒத்திசைவு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் செலவின பார்வையாளர் ராகுல் சிங்கானியா கலந்து கொண்டார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, அயனம்பாளையம் ஊராட்சியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து இன்று (ஜூன் 30) தமிழக அமைச்சர்கள் பொன்முடி மற்றும் சக்கரபாணி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். உடன் ஜெகத்ரட்சகன் எம்பி, மாவட்ட பொறுப்பாளர் பொன்.கௌதம சிகாமணி உள்ளிட்டோர் இருந்தனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பயன்பாட்டிற்காக விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதலாக தேவைப்படும் வாக்குப்பதிவு கருவிகளை (Ballot Unit) கொண்டு செல்லும் பணி மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.
75.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில், விருப்பம் தெரிவித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான அஞ்சல் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பயன்பாட்டிற்காக விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதலாக தேவைப்படும் வாக்குப்பதிவு கருவிகளை (Ballot Unit) கொண்டு செல்லும் பணி மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியை அசிங்கப்படுத்துவது என்று இ.பி.எஸ் சொல்வது உண்மை தான் என பாமக தலைவர் ராமதாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவையில் எதிர்கட்சியினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், சபாநாயகர் யாரையும் பேசவிடுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், எதிர்க்கட்சியினர் பேசும் விஷயங்கள் வெளியே வருவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், சட்டவிரோதமாக ஈவிஎம் இயந்திரங்களை விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு மாற்றியுள்ளதாகவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்திலேயே வைக்கப்பட வேண்டும் என்றும் எனத் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை SDPI கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமையும். பண விநியோகம், முறைகேடு உள்ளிட்டவற்றால் ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பு குறைவு என பல கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக, பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர், நேற்று அமைச்சர் பொன்முடி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது திமுகவுக்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது. மனுதாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு நேற்று சின்னங்கள் ஒதுக்கப்பட்டதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியலில், பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளா்கள் தாக்கல் செய்த 64 மனுக்களில், 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.