India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை மறுநாள் (அக்.27) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை பாதுகாப்பாக நடத்தி முடிக்க, சுமார் 6,000 போலீசார் ஈடுபட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டுப் பகுதியில் நேற்று இரவு பெரியார், காமராஜர், பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் கட்-அவுட்டுகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர், காவல்துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் கூட்டாக பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து உடனடியாக சரிசெய்ய வேண்டும். அனைத்து சாலைகளிலும் Speed Breaker தொலைவில் இருந்தே தெரியும் வகையில் தெர்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடுகள் வரைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
செஞ்சி வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் “உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு” திட்டத்தின் கீழ் (ஊட்டமிகு சிறுதானியங்கள்) விழிப்புணர்வு வாகனத்தை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் R.விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி தலைவர் KSM மொக்தியார் அலி மஸ்தான், வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (24.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான அரசு பள்ளிகளிலும் நாளை பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் கட்டாயம் நடைபெற வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடைபெற்று, நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், கூட்டத்திற்கு வருகை தரும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டையை தயார் செய்து வழங்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த டானா புயல், நாளை (அக்.25) காலை ஒடிசா, மேற்குவங்கம் இடையே புரி- சாகர் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று (அக்.24) விழுப்புரத்தில் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அக்.29ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ள
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பாதுகாப்பு பணியில் 5,500 போலீசாரை ஈடுபடுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில், 2 டி.ஐ.ஜி., 10 காவல் கண்காணிப்பாளர், 20 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 50 டி.எஸ்.பி., 200 ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், சி.வி.சண்முகம் நேரில் ஆஜரானார். அவர் தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து விசாரணையை நவ.25ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
செல்போன் கோபுரங்களில் மின்கலன்கள் திருடியது தொடர்பாக, திருவெண்ணைநல்லூர், வளவனூர், கிளியனூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய, விழுப்புரம் குபேரன் சிட்டி மாலிக், மகாத்மா காந்தி சாலை சௌத்ரி, திண்டிவனம் கோபாலபுரம் நௌசாத் சையிப், வேலூர் சையத் ஜாபர், யாமின் சையிப் ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில், 1 கோடி பனை விதைகள் நடும் திட்டத்தில், இதுவரை 1,068 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 4,08,636 பனை விதைகள் நட்டு விழுப்புரம் மாவட்டம் முதல் இடத்தையும், 3,094 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 3,77,581 பனை விதைகள் நட்டு நாமக்கல் மாவட்டம் இரண்டாமிடத்தையும், 828 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 32,713 பனை விதைகள் நட்டு செங்கல்பட்டு மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.