India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 94.11% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 92.28% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 96.04% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் ஒரு சில இடங்களில் கோடை மழை நேற்று வெளுத்து வாங்கியது. மழையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று உருவானது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. இந்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் கோடை நோய்கள் சற்று தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம், ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த, திமுக வார்டு உறுப்பினர் முத்துராமன், ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் நேற்று (மே 9) விழுப்புரம் தெற்கு பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். உடன் மண்டல் தலைவர் ரவிச்சந்திரன், மண்டல் பார்வையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுவதும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலை கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாவட்ட ஆட்சியர் பழனி அங்கு நேரில் சென்று சிசிடிவி கேமராக்களின் பட காட்சிகளை ஆய்வு செய்தார்.
மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டு அய்யனார் கோயில் பின்புறம் அருள்பாண்டியன் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இன்று அதன் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் 4 பெண்கள் வானவெடி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு திரியில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அதன் உரிமையாளர் ராஜேந்திரன், கௌரி மற்றும் ஆண்டாள் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம், திருவக்கரையில் அமைந்துள்ளது தேசியக் கல்மர பூங்கா. இந்த பூங்கா இந்திய புவியியல் மையத்தால் பராமரிக்கப்படுகிறது. ஐரோப்பாவை சேர்ந்த இயற்கையியலர் சொன்னேரெட் என்பவர் முதன்முதலில் கல் மரங்கள் இருப்பு குறித்து இவ்விடத்தை 1781இல் ஆவணம் செய்தார். இங்கு இருக்கும் கல்மரங்கள் சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இங்கு இருக்கும் கல் மரங்கள் பலவும் படுக்கை நிலையில் உள்ளன.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஏனாதிமங்கலத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதை முதன்மைச் செயலாளர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சஹாய் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் இன்று நேரில் ஆய்வுசெய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முருகன் (21) நேற்று (மே 8) மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு ஏரிக்கரை வழியாக நடந்து சென்றார். அப்போது ஒருவர் இவரது மொபைல் போனை பறித்துக்கொண்டு ஓட முயன்றார். அவரை, மடக்கி பிடித்த முருகன் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் தொரப்பாடியைச் சேர்ந்த சரத்குமார் (24) என தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சரத்குமாரை கைதுசெய்தனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை CCTV கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, அவர்கள் நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.