Villupuram

News January 27, 2026

விழுப்புரம்: சினிமா பாணியில் திருடனை மடக்கிய பொதுமக்கள்!

image

மணலூர்பேட்டை அருகே முருக்கம்பாடி கிராமத்தில், சாந்தி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற மூவர் கும்பலை உரிமையாளர் கைகாட்டினார். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், பார்த்திபன் (25) என்ற இளைஞரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய அய்யப்பன் (19) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். கைதான பார்த்திபனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

News January 27, 2026

விழுப்புரம்: மன உளைச்சலில் விபரீத முடிவு!

image

விழுப்புரம் அடுத்த ஐயூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் பார்வை குறைபாடு உள்ள இவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருது குடித்த அவரை உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 27, 2026

விழுப்புரம்: முதியவர் பரிதாப பலி!

image

திருக்கோவிலூர் அருகே உள்ள சிறுபனையூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி செல்வம் (43). இவர் ஜன-25 தனது சைக்கிளில் மணலூர்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கூவானூர் தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி அவர் பலத்த காயமடைந்தார். வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வம் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 27, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஜன.26 இரவு முதல் இன்று (ஜன.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 26, 2026

விழுப்புரத்தில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

image

விழுப்புரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 26, 2026

விழுப்புரம்: B.E/ B.Tech/ M.Sc/ MBA முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு!

image

மத்திய அரசு வங்கியான UCO (யூகோ) வங்கியில் காலியாக உள்ள 173 Generalist & Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E/B.Tech/M.Sc/MBA/MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து, வரும் பிப்ரவரி.02 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஷேர்!

News January 26, 2026

வீர செயல் புரிந்த காவல் துறை அலுவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்

image

விழுப்புரம் நகராட்சி, கீழ்ப்பெரும்பாக்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர், வீர செயல் புரிந்த காவல் துறை அலுவலர்களுக்கு பதக்கங்களை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.26) வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், உட்பட பலர் உள்ளனர்.

News January 26, 2026

விழுப்புரத்தில் 77வது குடியரசு திருவிழா

image

நாட்டின் 77வது குடியரசு திருவிழாவினை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு ஆணையத்தில் உள்ள மைதானத்தில் மூவர்ண கொடியை ஏற்றி விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வைத்தார்.
இந்த நிகழ்வில், விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிபதி மணிமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் க. பொன்முடி, டாக்டர் லட்சுமணன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி அருளரசு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!