India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய நாட்டின் 77வது குடியரசு தின விழா விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கு மைதானத்தில் ஆட்சியர் ஷேக் அப்துர் ரகுமான் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அவருடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தாய் பிரனிக் டிஐஜி அருளரசு முன்னாள் அமைச்சர் பொன்முடி சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆட்சியர் காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டார்

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வேயின் உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1.பாதுகாப்பு உதவி எண்-182, 2.மருத்துவ அவசர உதவி எண்-138, 3.ரயில் பெட்டி சுத்தம்-58888, 4.புகார், கருத்து தெரிவிக்கும் உதவி எண்-1800-111-139, 5.ரயில்வே போலீஸ் (RPF) உதவி எண்-1512, 6.குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்-1098, 7.பெண்கள் பாதுகாப்பு உதவி எண்-181. ஷேர் பண்ணுங்க

விழுப்புரம் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது கட்டுமான ஒப்பந்ததாரர் சே.சிவக்குமார், திண்டிவனத்தில் விடுதியில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார், சிவக்குமாரின் உடலைக் கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04146-259216) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் விழுப்புரம் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04146-223628 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கூட்டுரோட்டில் கனிம வளத்துறை அதிகாரி சுரேஷ்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் சிவானந்தம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து நடத்திய சோதனையில் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை பெய்து கொண்டிருப்பதால் இன்று (ஜன.26) குடியரசு தினவிழாற்கு மாவட்ட விளையாட்டு ஆணையம் மைதானத்தில் திட்டமிடப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும் பாராட்டு நற்சான்றுகளை கொடி ஏற்றுவதற்கு முன்னரே காலை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

திண்டிவனம் அடுத்த நொளம்பூர் கிராமத்தை சேர்ந்த விஜய் ஆனந்தன் கோழிக்கடையில் நின்றுகொண்டு இருந்த போது அங்கு வந்த 3 நபர்கள் கிண்டல் செய்தநிலையில் அவர் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பூவராகவன், கோபால் கத்தரிக்கோலை எடுத்து விஜய் ஆனந்தை குத்தி உள்ளனர். இதில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். முரளி, கோபால், பூவராகவன் மீதும் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஷேர் செய்யுங்க.
Sorry, no posts matched your criteria.