India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் காவல்துறையினர் இன்று (மே 18) இரு இளைஞர்களை கஞ்சா வழக்கில் கைது செய்தனர். மயிலம் சுடுகாட்டில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதை சமூக அலுவலர்கள் காவல்துறைக்கு தெரிவித்த வண்ணம் இருந்தனர். இது தொடர்பாக கூட்டேரிப்பட்டு சந்தோஷ் மயிலம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர்களை மயிலம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்துள்ள, செட்டிசாவடி கிராமத்தை சேர்ந்தவர் அருள்முருகன் (46). இவர் 6 மாத காலமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று (மே 17) காலை மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஐயன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள புதிய திருவண்ணாமலை புறவழிச்சாலையில், தனியார் பள்ளி அருகே நேற்று முன்தினம்(மே 16) நள்ளிரவு யாரோ சில மர்ம நபர்கள் கெமிக்கல் அடைக்கப்பட்ட பேரல்களை வீசி சென்றுள்ளனர். அந்த பேரல்களில் இருந்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் நெடி வீசியதால் அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி, “பி ஏரிக்கரை” புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை, கடலூர் மண்டல உதவி செயற்பொறியாளர் மற்றும் செயல் அலுவலர், செஞ்சி பேருராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோருடன் பார்வையிட்டு இன்று (மே 17) ஆய்வு மேற்கொண்டார். உடன் பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து உள்ளதால், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக கூடுதலாக 460 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று (மே 17) தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. வழிகாட்டி நிகழ்வில் மாணவர்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் பகுதியில் 3 சென்டி மீட்டரும், வலவனூர் பகுதியில் 2 சென்டி மீட்டரும் மழைப்பதிவாகியிருந்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மழைப் பொழிவுஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை கீழ்காணும் இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 முதல் 10 மணி வரை: வண்டிமேடு, முத்தோப்பு, சேவியர் காலனி, சென்னை மெயின்ரோடு, மேல்தெரு, மந்தக்கரை, சித்தேரிக்கரை, விராட்டிக்குப்பம் சாலை, கே.வி.ஆர். நகர், செஞ்சி சாலை, திருவாமாத்தூர். காலை 9 முதல் 11 மணி வரை: நவமால்காப்பேர், நவ மால்மருதூர், கண்டமங்கலம், பள்ளித்தென்னல்.
விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (மே 17) மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ அருங்குணம் கிராமத்தில் நேற்று (மே 16) அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் திமுக மரக்காணம் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், தயாளன் தென்களவாய் பழனி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
Sorry, no posts matched your criteria.