India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டிவனம் அடுத்த பேரணி கிராமத்தில் இன்று அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. பெரியதச்சூரிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த பத்தாம் நம்பர் கொண்ட அரசு பேருந்து, பேரணி அரசு டாஸ்மாக் அருகே சாலை வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கத்தில் உள்ள வயலில் பேருந்து இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இன்று (மே 31) பிறந்தநாள் காணும் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களை, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் செஞ்சியில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் மாவட்டச் செயலாளர்கள் மலைச்சாமி, பொன்னிவளவன், தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே நேற்று(மே 30) வேகமாக வந்த கார், சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதியது. இதை தொடர்ந்து பின்னால் வந்த 2 கார்களும் மோதி சாலையின் குறுக்கே நின்றது. அடுத்தடுத்து 3 கார்கள் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் மொத்தமாக மதுவிலக்கு வழக்கில் 8220 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் , 46 இருசக்கர வாகனங்கள், 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கல்லூரி மாணவர்களிடையே 275 விழிப்புணர் முகாம்கள் நடத்தப்பட்டது எனவும் தனது அறிக்கையில் இன்று மாவட்ட கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கோடை மழை முடிவடைந்து, ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செஞ்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களின் பிறந்தநாள் விழா நாளை (மே.31) கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று திமுகவின் மூத்த அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் சார் அவர்களுக்கு அமைச்சர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சால்வை அறிவித்தனர்.
வானூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையுற்றேன். பரமசிவம் அவர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கழகப் பணியையும் மக்கள் பணியையும் திறம்பட ஆற்றிய செயல்வீரர் ஆவார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் CCTV மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை ஆட்சியர் பழனி இன்று நேரில் பார்வையிட்டு காவலர்களுக்கான வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் அடுத்த கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த வானூர் முன்னாள் எம்எல்ஏ எம்.பரமசிவம் நேற்று (மே 29) மாலை காலமானார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மொ.ப.சங்கரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் இவரது இறுதி அஞ்சலியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொள்வார் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசினர் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஆட்சியர் பழனி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் வருகைப் பதிவேடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு கேட்டறிந்தார். தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்க உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.