India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம், திமுக மக்களை முட்டாள்களாக்கி முதுகில் குத்தியிருப்பதாக அன்புமணி கடுமையாக சாடியுள்ளார். விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசுதான் இந்த கட்டண உயர்வு என்றும், ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்ற நிலையில், இன்று அவர் பதவி ஏற்க உள்ளார். பாமக வேட்பாளரை விட சுமார் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று சபாநாயகர் அப்பாவின் இல்லத்தில் முதலமைச்சர் மற்றும் மற்ற எம்எல்ஏக்கள் முன்னிலையில், இன்று அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளது.
விழுப்புரம் நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மாதத்தில் ஒரு நாள் தனியாக மாவட்ட ஆட்சியரகம் குறைதீர்ப்பு நாள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். தங்களுக்கான வாழ்வாதாரத்தை மற்றும் பள்ளி பொருளாதாரத்தை மேம்படுத்த தனியாக ஒரு நாள் மாதத்தில் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சிறுவாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுய உதவிக் குழு பெண்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் தங்கள் பகுதியில் DRDA மூலம் அரசு வங்கி வழங்கிய ரூ.1 கோடியே 20 லட்சம் கடனை, 11 மகளிர் சுய உதவி குழு ஒன்றுக்கு தலா 5 லட்சம் வீதம் 55 லட்சம் பணம் மட்டும் வழங்கி, மீதமுள்ள 70 லட்சத்தினை PLF ஊழியர்கள் கையாடல் செய்து விட்டார்கள் என ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (15-07-2024) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். பாமக வேட்பாளரைவிட 69,000 வாக்குகள் அதிகம் பெற்றார். இந்நிலையில், நாளை அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். சபாநாயகர் அப்பாவு, நாளை அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். மேலும், விக்கிரவண்டியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமையை பெற்றார் அன்னியூர் சிவா.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெண்களை அடைத்து வைத்ததால் தான் திமுக வெற்றி பெற்றதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருச்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “மக்கள் ஒரு நிமிடம் சிந்தித்திருந்தால், பாமக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார். திமுக அமைச்சர்கள் 23 பேர், தேர்தலின் போது தெரு தெருவாக பட்டியைப் போட்டு பெண்களை அடைத்து வைத்தனர். இப்படி தான் அவர்கள் வெற்றி பெற்றனர்” என்றார்.
நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பாமக வேட்பாளர் சி,அன்புமணி 18 பூத்துகளில் 20க்கும் குறைவான ஓட்டுகளே வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விவரம் வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிய வந்துள்ளது. ஆனாலும், பாமக டெபாசிட் பெற்றது குறிப்பிடத்தக்கது. திமுக முதலிடமும் (124053 வாக்குகள்), பாமக 2ஆவது இடமும் (56296 வாக்குகள்), நாம் தமிழர் கட்சி 3ஆவது இடமும் (10,602 வாக்குகள்) பெற்றது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிகார பலத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார். காட்பாடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. இதனால் தான் அதிமுக போட்டியிடவில்லை. அதிமுகவுக்கு தோல்வி பயம் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். எம்.பி. தேர்தலில் அவருடைய சொந்த தொகுதியில் அதிமுகவுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன” என்றார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிறைவடைந்த பிறகும் கூட தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தால் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறாது. எனவே பொதுமக்கள் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.