India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்துள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் காந்தி உதவி பெறும் அரசு பள்ளியில், இன்று (ஜூலை 18) காலை உணவு திட்டத்தினை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் தொடங்கி வைத்தார். தொடரந்து மாணவர்களுடன் உணவு சாப்பிட்டார். உடன் வானூர் ஒன்றிய பெருந்தலைவர் உஷா முரளி உள்ளிட்டோர் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்ப உள்ளனர் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில், பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியை, போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்ததாக, பெண் உதவி ஆய்வாளர் காவல் துறையில் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ரவுடி அறிவழகனை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று (ஜூலை 18) நடைபெற்ற மக்கள் முதல்வன் திட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் சிவா கலந்து கொண்டார். அப்போது, “பல ஆண்டுகளாக மக்கள் மட்டுமே அரசு அதிகாரிகளை தேடி நகரங்களுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது திராவிட மாடல் ஆட்சி வந்த பின், அரசு அதிகாரிகள் மக்களைத் தேடி சென்று அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்குகிறார்கள்” என பெருமிதமாக கூறினார்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை ஊராட்சியில் உள்ள ஊரக பகுதிகளில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தொடங்கு வைத்தார். பின்னர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் சி.பழனி, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயசந்திரன், அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் அரசூர் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் அருட்கொடி அரசு உதவி பெரும் பள்ளியில், காலை உணவு திட்டம் இன்று (ஜூலை 18) தொடங்கப்பட்டது. இதனை, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் தொடங்கி வைத்த அவர், மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கினார்.. பின்னர், மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதில், உடன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கு காரீப் நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நெல் விவசாயி ஏக்கருக்கு ரூ.690 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இதற்கு காப்பீட்டு தொகையாக ரூ.34,500 என தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கு காரீப் நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நெல் விவசாயி ஏக்கருக்கு ரூ.690 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இதற்கு காப்பீட்டு தொகையாக ரூ.34,500 என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.