India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 16 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவி ரிஷிகா தமிழ்-98, ஆங்கிலம்-98 கணிதம்-98 அறிவியல்-97 சமூக அறிவியல்-100 மொத்தம் 491 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும் மாவட்ட அளவில் மூன்றாவது இடமும் பிடித்தார், இவருக்கு மேல்மலையனூர் ஊராட்சி மன்றம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மாணவியை பாராட்டினார்
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு கோரி முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் விரைவில் பாமக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த வழக்கில், சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவு செய்ததாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா, விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானர். தவறான தகவலை எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததாக சிபிசிஐடி போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி முன்னிலையில் பாஜக நிர்வாகி எஸ்.ஜி. சூர்யா ஆஜரானார்.
தொடர் மழை காரணமாக விழுப்புரத்தில் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன்படி, விழுப்புரம் காய்கறி மார்க்கெட்டில் பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.70, கேரட் ரூ.85, பீன்ஸ் ரூ.40, முட்டைகோஸ் ரூ.40, தக்காளி ரூ.50, வெங்காயம் ரூ.40, முருங்கைக்காய் ரூ.90, இஞ்சி ரூ.150, உருளை ரூ.60, கத்தரி ரூ.40 விற்பனையாகின்றன. இந்த விலை மாவட்டம் முழுவதும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட கடங்கப்பட்டு ஊராட்சி, கொண்டலங்குப்பம் கிராமத்தில் பிரதம மந்திரி ஜென்மான் திட்டத்தின்கீழ், இருளர் மக்களுக்கான குடியிருப்பு வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.பழனி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உடனிருந்தார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அல்லது employmentexchange.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில், ரூ.200 முதல் ரூ.1,000 வரை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் விழுப்புரம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
விழுப்புரத்தில் நாளை வண்டிமேடு, விராட்டிகுப்பம், நன்னாடு, பாப்பான்களம், திருவாமாத்தூர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யாபாக்கம், ஆனங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டம்பாளையம், ஜானகிபுரம், வழுதரெட்டி, தொடர்ந்தனூர், கோலியனூர், கே.வி.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும்.
Sorry, no posts matched your criteria.