Villupuram

News June 8, 2024

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

image

விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் புதிய பேருந்து நிறுத்தம் அருகே இன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரு நபர்களை சோதனை செய்ததில், இருவரும் வைத்திருந்த பேக்கில் சுமார் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜசுந்தர பாண்டி (27), ரஞ்சித் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News June 8, 2024

செஞ்சி: தேர் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்பு

image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிங்கவரம் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தார். உடன் செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் R. விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

News June 8, 2024

விக்கிரவாண்டி: ரயில்வே தளவாட பொருட்கள் திருடிய சிறுவர்கள் 

image

விக்கிரவாண்டி போலீசார் நேற்று(ஜூன் 7) டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில், 17 வயதுடைய 2 சிறுவர்கள் சாக்கு பையில் வி.சாத்தனுார் ரயில்வே கேட் பகுதியிலிருந்து ரயில்வே இரும்பு தளவாட பொருட்களை திருடி வந்தது தெரியவந்தது. பிடிப்பட்ட இருவரையும் திண்டிவனம் ரயில்வே போலீசாரிடம் விக்கிரவாண்டி போலீசார் ஒப்படைத்தனர்.

News June 7, 2024

எண்ணெய் துவரம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்

image

06.06.24. விழுப்புரம்
2024 தேர்தல் முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி அமுலில் இருந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அத்தியாவசியப்பொருளான பாமோலின் எண்ணெய் மற்றும் துவரம்பருப்பு பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2024-மே மாதம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2024-ஜீன் மாதத்தில் முதல் வாரத்தில் வழங்கப்படும்

News June 7, 2024

‘சென்ற மாத பொருட்கள் இந்த மாதம் கிடைக்கும்’

image

விழுப்புரம் ஆட்சியர் நேற்று (ஜூன் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தது. இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2024 மே மாதம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அத்தியாவசியப் பொருளான பாமோலின் எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு மே மாதம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்தில் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேற்று (ஜூன் 6) அறிவித்துள்ளார்.

News June 6, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அத்தியாவசியப் பொருளான பாமோலின் எண்ணெய் மற்றும் துவரம்பருப்பு மே மாதம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜீன் மாதத்தில் முதல் வாரத்தில் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இன்று(ஜூன் 6)  அறிவித்துள்ளார்

News June 6, 2024

வாலிபர் இறப்பு மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை

image

விழுப்புரம், முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியத்தால் அருண் குமார் என்ற இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இன்று மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  இதில், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர்.

News June 6, 2024

விழுப்புரம்: இருளர்களுக்கான வீடுகள் கட்டும் பணி

image

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமானடி ஊராட்சியில், பிரதம மந்திரி ஜன்மந்த் குடியிருப்பு திட்டத்தின்கீழ், இருளர்களுக்கான வீடுகள் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் சென்றனர்.

News June 6, 2024

விழுப்புரம்: 4 மணி வர மழைக்கு வாய்ப்பு!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.

error: Content is protected !!