India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அதனை இன்று (ஆக.24) செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டனர். உடன் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் மற்றும் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் வாசிகளே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின்<

பஹ்ரைன் நாட்டில் நேற்று (அக்.23) இரவு நடந்த U-18 மகளிர் இறுதிப் போட்டியில் இந்திய கபடி அணி ஈரான் அணியை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதில் விழுப்புரம் நகரம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த இளம் கபடி வீராங்கனை கார்த்திகா துணை கேப்டனாக பங்கேற்று சாதித்துள்ளார். இந்த வெற்றி விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு பெருமையையும், இளம் வீரர்களுக்கு உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.10.2025 முதல் தொடங்கும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஷீக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் போலீசாரின் (அக்.23) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பெங்களூரில் இருந்து காரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் ஆம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன், அன்ராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் ஆகிய 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1.5லட்சம் மதிப்புள்ள 177 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.ஏ.ராமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று அக்.23 நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை காவல்துறை நகராட்சி நிர்வாகம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.