India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் வீட்டில் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் நபருக்கு சொந்த நூலகங்களுக்கு விருது என்ற பெயரில் 3 ஆயிரம் மதிப்பில் கேடயம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்கள் வீட்டில் உள்ள நூலகத்தின் விவரங்களுடன், பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை dlovellore70@gmail.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூரில் அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நாளை (டிசம்பர் 19) மேற்கொள்ள உள்ளதால் புதிய, பழைய பஸ் நிலையம், பைபாஸ் சாலை, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன், சலவன்பேட்டை, ஆபிசர்ஸ்லைன், அப்துல்லாபுரம், கஸ்பா, கொணவட்டம், சேண்பாக்கம், விருதம்பட்டு, கொசப்பேட்டை, ஓல்டுடவுன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று டிசம்பர் 17 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
குடியாத்தம்,காந்தி நகரில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில், இன்று 17 காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம், சப் கலெக்டர் சுபலட்சுமி தலைமையில் நடக்கிறது. இதில், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். குடியாத்தம் கோட்டத்துக்கு உட்பட்ட குடியாத்தம், கே.வி.குப்பம், பேர்ணாம்பட்டு ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள்,விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தனிநபர் பிரச்னையை மனுக்களை அளிக்கலாம்.
வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (55). இவர் வீட்டுமனை பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து அலமேலுமங்காபுரம் வி.ஏ.ஓ ஷர்மிளா பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஷர்மிளாவை கைது செய்தனர். இந்நிலையில் லஞ்ச வழக்கில் கைதான ஷர்மிளாவை, சஸ்பெண்ட் செய்து, ஆர்.டி.ஓ பாலசுப்பிரமணியன் இன்று உத்தரவிட்டார்.
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான திருக்குறள் முதல்நிலை வினாடி வினா போட்டி வருகிற டிசம்பர் 20ஆம் தேதி சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் 8124539133, 9677555817 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் – காட்பாடி சாலையில் கடந்த 2 நாட்களாக நடந்த தொடர் விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இன்று (டிசம்பர் 16) விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் கால்வாய் கட்டும் பணி முடியும் வரை பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் (scrap) உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளது. இவை வரும் டிசம்பர் 20-ம் தேதி வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் இன்று (டிசம்பர் 16) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (டிச.16) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 471 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில் குமரன், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன். மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (டிசம்பர் 15 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.