Vellore

News December 23, 2024

தமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல நிதி

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத் நகர் பகுதியை சேர்ந்த கவிதா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல நிதி உதவி திட்டத்தின் கீழ், இயற்கை மரண நிவாரண உதவி தொகை ரூபாய் 20,000/- ஆணையினை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்  மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News December 23, 2024

சிறுத்தை தாக்கி பலியான மாணவியின் குடும்பத்திற்கு உதவி

image

வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் துருவம் கிராமத்தில் கடந்த வாரம் சிறுத்தை தாக்கி மரணம் அடைந்த இளம் பெண்ணின் குடும்பத்தாரிடம் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரணத் தொகையாக ரூ.1 லட்சத்திற்கான ஆணையினை எம்பி கதிர் ஆனந்த் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில்இன்று (டிசம்பர் 23) வழங்கினார். இதில் கலெக்டர் சுப்புலட்சுமி குடியாத்தம், ஆர்டிஓ சுபலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News December 23, 2024

வேலூரில் 2,800 கிலோ குட்கா பறிமுதல்: 5 பேர் கைது

image

வேலூர் சத்துவாச்சாரி போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று பிள்ளையார் குப்பம் சர்வீஸ் சாலையில் சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த 3 வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 2,800 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, அப்சர் பாஷா, அக்சய் குமார்,  ஷிகில், முகமது ரபிக், திருவேங்கடம் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 22, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிசம்பர் 22.12.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News December 22, 2024

ராணுவத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் – ஆளுநர்

image

முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்வு முகாம் விஐடியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசும் போது, முன்னாள் ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். இந்தியாவை 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக ராணுவத்திற்காகவும், ராணுவ வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

News December 21, 2024

1 கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதிய பலன்கள்; கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று(டிசம்பர் 21) முன்னாள் படைவீரர்களுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதிய பலன்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி வழங்கி, முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதிய குறைதீர்ப்பு சிறப்பு முகாமை தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News December 21, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிசம்பர் 20.12.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News December 20, 2024

வேலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் 

image

வேலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் இன்று (20.12.2024) பகல் 12 மணி அளவில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் திட்ட குழு தலைவர் மு.பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News December 20, 2024

கல்லூரி மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி

image

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான intercollegiate Table Tennis போட்டி டிச.24ஆம் தேதி வேலூர், DKM மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. பல்கலை.யின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவிகள் மட்டும் இப்போட்டியில் பங்கு பெறலாம். இந்த போட்டி பல்கலைக்கழகத்தின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெறும்.

News December 20, 2024

வேலூரில் நண்பரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

image

வேலூர் கஸ்பாவைச் சேர்ந்தவர் ஜமீர் (29) பெயின்டர். தொரப்பாடியைச் சேர்ந்தவர் ஜூபேர் (27) பேக்கரி ஊழியரும் நண்பர்கள். கடந்த 2022ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி மது போதையில் ஜூபேரின் தலையில் கல்லை வீசி ஜமீர் கொலை செய்தார். இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஜமீருக்கு ஆயுள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

error: Content is protected !!