India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று (நவ.7) வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருவண்ணாமலை சேர்ந்த ராமராஜன், ரசூல், வேல் ஆகிய 3 பேரை கைது செய்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் நவ 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் 3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (நவம்பர் 7) நடத்திய சோதனையில் 115 மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
பொன்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன் பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக மகிமண்டலம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்ற நிதியாண்டில் நீதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்படும் என்றார்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலின் 29ஆம் ஆண்டு சூரசம்ஹார விழா இன்று மாலை சுமார் 7 மணியளவில் கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காலை 9.30 மணியளவில் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சண்முக பெருமானுக்கு மகா அபிஷேகமும், சத்ருசம்ஹாரதிரசதி சண்முகார்ச்சனை நடக்கிறது. மேலும், 3 மணியளவில் சண்முக பெருமான் போருக்கு புறப்படுகிறார். எனவே கோயில் பகுதியில் காலை முதலே பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று முதல் கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நடக்கிறது. இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு இன்று முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இந்த முகாமில், நாளை (07.11.2024) வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலைப் பயிற்சி வழங்குகிறது. மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு சான்றிதழுடன் மாத ஊதியம் 16,000 முதல் ரூ.20,000 வரை கிடைக்கப்பெறும். இப்பயிற்சியானது வேலூரில் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 8072828762, 9025808570 எண்ணிற்கு அழைக்கலாம்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவ.6) நடத்திய சோதனையில் 78 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக 5 பேர் மீது மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இது போன்ற தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் மேல்பாடி ஊராட்சியில் சின்னகீச குப்பம் பகுதியில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் துரைமுருகன் நாளை மாலை திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (நவ. 6) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஜ்ஜித், உதவி ஆணையர் (கலால்) முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் உமா மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.