India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேர்ணாம்பட்டு அடுத்த ஓங்குப்பம் கிராமத்தில் சரளா என்பவர் வளர்த்து வந்த கன்றுக்குட்டியை நேற்று சிறுத்தை கடித்து கொன்றது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்தப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் தெளிவாக பதிவாகி இருந்தது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், சிறுத்தையை பிடிக்க வலியுறுத்துகின்றனர்.
வேலூர் அண்ணா சாலையில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக வடக்கு காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்குள்ள பெட்டிக்கடையின் பின்புறம் சோதனை செய்தனர். அங்கு தொரப்பாடி பகுதியை சேர்ந்த ஒருவர் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 உழவர்சந்தைகளில் கடந்த 2024 ஆண்டு நடந்த விற்பனை வேலூர் டோல்கேட் சந்தையில் ரூ.50.5 கோடி, காட்பாடி ரூ.34.95 கோடி, குடியாத்தம் ரூ.23.70 கோடி, ரூ.20.51கோடி, பள்ளிகொண்டா ரூ.2.12 கோடி, பேரணாம்பட்டு ரூ.2.45 கோடி மொத்தம் ரூ.133 கோடியே 80 லட்சத்து 63 ஆயிரத்து 308-க்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் நேற்று கே.வி.குப்பம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நித்தியானந்தம் (27) என்ற வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர் அப்போது அவரிடம் 1 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜனவரி 4) நடத்திய சோதனையில் 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜன. 04) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.
வேலூர் மாவட்டத்தில் 4,51,410 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களில், இதுவரை 2,33,783 அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வரும் 9ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எந்த சிரமமின்றி பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
2025-2026 ஆம் கல்வி ஆண்டில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டியை இன்று காலை 6 மணியளவில் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சிருஷ்டி பள்ளி நுழைவாயிலில் கலெக்டர் சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க இன்று (ஜனவரி 3) மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 45 மது பாட்டில்கள், 2 லிட்டர் கள்ளச்சாராயம், 150 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட எஸ்பி மதிவாணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.