Vellore

News March 21, 2026

வேலூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – தேர்வு கிடையாது!

image

வேலூர் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 21, 2026

இஎஸ்ஐ மருத்துவமனையில் 4 கிலோ கட்டி அகற்றம்!

image

வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்தவர் சத்யா (42). இவர் கடந்த ஓராண்டாக வயிறு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சத்யா, வேலூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரை, பரிசோதனை செய்ததில் அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று டாக்டர் மாதுரி, தலைமையில் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த 4 கிலோ கட்டியை கர்ப்பப்பையுடன் அகற்றினர்.

News March 21, 2026

வேலூர் மாவட்டத்தில் 60 இடங்கள் தேர்வு!

image

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பிரசார கூட்டங்கள் எங்கெங்கு நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து அதற்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்கள், பிரசார கூட்டம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2026

வேலூரில் மீண்டும் திறப்பு!

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள தலைவர்களின் சிலைகள் அனைத்தும் மறைக்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட தேவையில்லை எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அரசியல் சிலைகள் மீது போர்த்தப்பட்டு இருந்த தார்ப்பாய்கள் நேற்று அகற்றப்பட்டன.

News March 21, 2026

வேலூரில் தலை நசுங்கி பலி!

image

வேலூர்: காகிதபட்டறை பகுதியில் நேற்று, சுமார் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் சத்துவாச்சாரி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து வாலிபர் ஓட்டி சென்ற பைக் மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் வாலிபர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News March 21, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 20, 2026

வேலூர்: சாலை விதிகளைப் பின்பற்ற காவல்துறை அறிவுறுத்தல்

image

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறை சார்பில் “உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்” என்ற விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ​இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், சாதாரண தலைக்கவசங்களைத் தவிர்த்து தரம் வாய்ந்த ISI முத்திரை பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!