India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் ஓட்டேரி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையம் உள்ளது. நேற்று திடக்கழிவு மேலாண்மை மையத்தில் உள்ள குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து காட்பாடி வழியாக ஆந்திராவுக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. நேற்று (மார்ச்.22) பென்னாத்தூர்-வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு இடையே சென்றபோது ரயில் மோதி உடல் தூக்கிவீசப்பட்டு அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் பலியானார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தபால் வாக்களிக்க விருப்ப படிவம் வழங்கும் பணிகளை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமி இன்று (மார்ச் 22) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்கள் 48 மணி நேரத்திற்குள் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான ஆவணங்களை வழங்கினால் பணத்தை திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி இன்று ( மார்ச் 22 ) தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மார்ச்.22) வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணா சாலை பகுதியில் வசிக்கும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களிடம் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்துவதற்கான விருப்ப படிவம் 12 D ஐ வழங்கினார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் மிக பிரபலமான பிண்ணனி பாடகியான வாணி ஜெயராம் பிறந்த ஊர் வேலூர். கலைவாணி என்ற இயற்பெயரை கொண்ட இவர் தமிழ் உட்பட 19 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கிய இவர் “ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி” என்று அழைக்கப்பட்டார்.நித்தம் நித்தம் நெல்லு சோறு, பாரதி கண்ணம்மா போன்ற பாடல் மிகவும் பிரபலமாவை. பல விருதுக்கு சொந்தக்காரரான இவர் தனது 77வது வயதில் உயிரிழந்தார்.

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வரும் 24-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார். காலை 10:30 மணியளவில் வேலூரிலும் தொடர்ந்து 11:30 மணியளவில் குடியாத்தம் பகுதியிலும் வாகன பரப்புரை மேற்கொள்கிறார் என அக்கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னேற்பாடு பணிகளை கட்சியினர் செய்து வருகின்றனர்.

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க <
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.