India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி ராணுவக் கல்லூரியில் ஓட்டுநராக இருந்த உ.பி.யைச் சேர்ந்த யோகேந்திர சிங் பயில்வார், கடந்த 2018ஆம் ஆண்டு ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதானார். இது தொடர்பான வழக்கு வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் ராணுவ ஊழியர் யோகேந்திரசிங் பயில்வார்க்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 60,000 அபராதமும் விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
லத்தேரி காவல் நிலையத்தில் நேற்று இந்து முன்னணி நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில் கானா பாடகி இசைவாணி மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பாடல் பாடியுள்ளார். இந்த பாடல் பாடி வெளியிட்ட கானா பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவினை பெற்று கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
ஏ.கஸ்பா பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் (42) என்பவர் சித்தூரில் தனது தங்கை வீட்டு கிரகப்பிரவேசம் விழாவை முடித்துக் கொண்டு மீண்டும் ஆம்பூர் நோக்கி நேற்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். விரிஞ்சிபுரம் அடுத்த மேல்மொணவூர் அருகே சென்று கொண்டிருந்தபோது தவறான ரூட்டில் வந்த டாடா ஏசி இவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலே மரணமடைந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (30/11/2024) வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவம்பர் 28) காட்பாடி வட்டம், மகிமண்டலம் அருகே நடைபெற்று வரும் பெங்களுரு-சென்னை அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பெங்களூரு-சென்னை அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் சாவித்திரி தேவி, திட்ட மேலாளர் ஹக், பொறியாளர் ஜெயக்குமார், வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ஆம் தேதி காலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக, வரும் 30ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை நவம்பர் 30-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கட்டணமாக ரூ.50 பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வேலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் தூய்மைப் பணியை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். எனவே, முதல் கட்டமாக பயன்பாட்டில் உள்ள பூங்காக்களில் சிதறி கிடக்கும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில் வரும் நவ-30 அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை திருவள்ளுவர் அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளி,தரணம்பேட்டை, குடியாத்தம் வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 20,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவ்வேலை வாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கு பெறலாம்.
இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வாகியுள்ள 52 பேருக்கு பணிநியமன ஆணைகளை வேலூர் சரக டிஐஜி தேவராணி வழங்கினார். வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயுதப்படைக்கு தேர்வான 17 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு தேர்வான 22 பேர், சிறைத்துறைக்கு தேர்வான 2 பேர், தீயணைப்பு துறைக்கு தேர்வான 11 பேர் என மொத்தம் 52 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.