India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்க கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ள மகாபலிபுரத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் இருந்து உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையில் 20 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மகாபலிபுரத்திற்கு இன்று (நவம்பர் 30) புறப்பட்டு சென்றனர்.
வேலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கரையினை கடந்து சென்றாலும் டிசம்பர் 1 அன்றும் மாவட்டத்தில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், மின்கம்பம் மற்றும் மின்சார ஒயர்கள் செல்லும் இடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கேட்டுக் கேட்டுக்கொண்டார்.
குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நகர, ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளிலும் மற்றும் வார்டுகளிலும் புயல் மற்றும் மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் பொது மக்களுக்கு பாதிப்பு இருந்தால் உடனடியாக கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் தனது செய்தி குரூப்பில் தெரிவித்துள்ளார். தொலைபேசி எண்கள் 9843316321, 9486270019, 9442412435
வேலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மழை தொடர்பான புகார்களை தொலைபேசி எண் 0416 – 2258016, கட்டணமில்லா எண் 1077, வாட்ஸ் அப் எண் 9384056214 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் சந்தையில் இன்றைய காய்கறி விலை (கிலோவில்) தக்காளி ரூ.38, வெண்டை ரூ.34, கத்தரிக்காய் ரூ.20-25, புடலை ரூ.34, பீர்க்கன் ரூ.30-45, சுரைக்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.46, கறிவேப்பிலை ரூ.45, கொத்தமல்லி ரூ.55, கேரட் ரூ.46-50, பீன்ஸ் ரூ.50-55, காலிபிளவர் ரூ.20-30, முள்ளங்கி ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.55-55-60, சின்ன வெங்காயம் ரூ.50, இஞ்சி ரூ.44 விற்பனை செய்யப்படுகிறது.
குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இதுதொடர்பாக ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.
வேலூர் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இன்று (நவ 30) சனிக்கிழமை முதல் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுளள்து.இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு வேலூர் மாவட்ட காவல் துறை அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திவ்யதர்ஷினி வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (நவம்பர் 29) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 30) ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் சேவை நாளை (நவம்பர் 30) நடக்கிறது. இதை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 50 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 30 சிறப்பு பஸ்களும் மேல்மலையனூருக்கு இயக்கப்படுவதாகபோக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.