India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மட்டன் பாயா என்பது வேளூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு உணவு வகையாகும்.இது மட்டன் கால் மற்றும் எலும்புகளை வைத்து செய்யப்படும் ஒரு சுவையான குழம்பு ஆகும்.வேலூர் நகரில் பல இடங்களில் கிடைக்கும். குறிப்பாக தெரு ஓர கடைகளில் கிடைக்கும். சப்பாத்தி, இடியப்பம், அல்லது பிரியாணியுடன் சேர்த்து சாப்பிடலாம். பாயா உங்களுக்கும் புடிக்கும் என்றால் உங்கள் Foodie நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.
வேலூரில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த <
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் திருமலைக்கோடியில் அமைந்துள்ளது அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில். இந்த கோவில் 1500 கிலோ தங்கத்தில் ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு மகா மண்டபத்தில் நின்று கொண்டு அம்மானை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.இந்த கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிள் என்று அழைக்கப்படுகிறது. #பகிருங்கள்
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியாக மருந்தியல் துறையில் இளங்களை அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மாதம் ரூ.35,400 – 1.30 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 18- 59 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<
குடியாத்தம் அடுத்த பரவக்கல்லைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் அருகே உள்ள கன்னிகோவிலுக்கு குலதெய்வ வழிபாட்டுக்கு சென்றுள்ளார். அங்கே பொங்கல் வைத்து வழிபாடு செய்தபோது மரத்தில் இருந்து தேனீக்கள் கிளம்பின. தேனீக்கள் கொட்டியதால் படுகாயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதில் செந்தில்குமார் உயிரிழந்தார்.
காட்பாடியில் பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்கக்கோரி, மாவட்ட த.வெ.க சார்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியால் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பாக வைக்கப்பட்ட பேனரில் “WE STAND FOR WOMEN HARRASEMENT” என்று அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.WE STAND AGAINST WOMEN HARASSMENTஎன்பதே பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம் என்று பொருள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு.
ராணிப்பேட்டை ரெண்டாடி அருகே உள்ள விவசாய நிலத்தில் ரவுடி சீனிவாசன் என்கிற கிருஷ்ணகுமாரை நேற்று (மார்.8) மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. வயல்வெளியில் மறைந்திருந்த அந்த மர்ம கும்பல், சீனிவாசனை தாக்கி ஓட ஓட விரட்டி உடல் முழுவதும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. உயிரிழந்த சீனிவாசன் வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஆவார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக்கோரி நடைபெற்ற தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கையெழுத்து இயக்கம் தொடர்பாக வைக்கப்பட்ட பேனரில் WE STAND FOR AGAINST WOMEN HARASSMENT என்பதற்கு பதிலாக WE STAND FOR WOMEN HARRSEMENT என்று இடம் பெற்றுள்ளது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.