India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவசூர் தீர்த்தகிரி மலைக்கு கடந்த வாரம் காதல் ஜோடியினர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் மலையில் ஒரு மறைவான இடத்தில் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனை அவர்களுக்கு தெரியாமல் 2 மர்மநபர்கள் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்து, காதல் ஜோடியிடம் பணம், நகை பறித்தது தொடர்பாக 2 பேர் செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் வேலூர் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் வரும் 12-ம் தேதி புதன்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் முன்கூட்டியே கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், மற்றும் வட்டாட்சியரிடம் மனுக்கள் அளித்து நல்ல திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் நாளை (பிப்ரவரி 7) ஓய்வூதியர்கள் குறைதீர்வு நாள் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியதாரர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்.06) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்றுமுன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
பொது விநியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும் விதமாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா வாரியாக பொதுவிநியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொண்ட சமுத்திரம் சாமியார் மலைப்பகுதியில் இன்று (பிப்ரவரி 6 ) ஏழுமலை என்பவரது ஆட்டுக்கொட்டைக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த ஆடுகளை தாக்கியதில் நான்கு ஆடுகள் பலியானது. இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொடர் சிறுத்தை அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பள்ளிகொண்டாவில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் பெல் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வரும் (apprentice) மூன்று ஐ.டி.ஐ மாணவர்கள் இன்று (பிப்ரவரி 6) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வேலூர் ரங்காபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் ஜீவா, ஹரிஹரன் இருவரும் லாரியின் டயரில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <
பள்ளிகொண்ட அடுத்த கீழாச்சூர் வாணி தெருவை சேர்ந்தனர் 66 வயது மூதாட்டி லட்சுமி, இவர் நேற்று காலை வங்கிக்கு சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த மர்மநபர், இந்த பகுதியில் திருடர்கள் தொல்லை அதிகம் இருப்பதால் நகைகள் அணிந்து செல்லவேண்டாம் என்று கூறி இவரிடம் இருந்த நகையை வாங்கி காகிதத்தில் மடிப்பது போல் பாவனை செய்து திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.