Vellore

News February 8, 2025

வேலூர் இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வேலூர் சேண்பாக்கம் பகுதியில் இன்று (பிப்ரவரி 08) நடந்தது. இதில், வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் நறுவி மருத்துவமனை தலைவருமான முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட சங்க செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் திவாகர், இணைச்செயலாளர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News February 8, 2025

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழப்பு

image

காட்பாடி கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளியதில் படுகாயம் அடைந்த பெண், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது எனவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News February 8, 2025

வாகனம் மோதி கோவில் பூசாரி படுகாயம்: போலீசார் விசாரணை

image

பொன்னை கீரைசாத்து பகுதியை சேர்ந்தவர் இருசப்பன் கோவிலில் பூசாரி. இவர் நேற்று வீட்டில் இருந்து பொன்னைக்கு சென்றுள்ளார். ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதற்காக வந்த வாகனம் இருசப்பன் மீது மோதி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து பொன்னை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பணம் கொண்டு சென்ற வாகனத்தை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 8, 2025

பேரணாம்பட்டில் தண்ணீர் தொட்டியில் மூதாட்டி பிணம்

image

பேரணாம்பட்டு டவுன் செக்குமேடு முருகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரா (வயது 70). மாற்றுத்திறனாளி இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று காலை 7 வீட்டின் முன்பகுதியில் திறந்த நிலையில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

News February 8, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில், பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News February 7, 2025

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 15 அடி நீளம் மலைப்பாம்பு

image

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சிவராஜ் நகர் பகுதியில் இன்று (பிப்ரவரி 7) அதிகாலை குடியிருப்பு பகுதிக்கு அருகே சாலையில் சுமார் 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது இதை கவனித்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பேரணாம்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மலைப்பாம்பை பிடித்து வனத்துறை இடம் ஒப்படைத்தனர்

News February 7, 2025

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை

image

குடியாத்தம் ரயில்வே நிலையம் அருகே காவனூர் பகுதியில் இன்று பிப்ரவரி 7 பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி ஆண் சடலத்தை மீட்டு, குடியாத்தம் நகர காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும்  மீட்கப்பட்ட நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

News February 7, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் இளைஞர் நீதி குழுமத்திற்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு வேலூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. http:/vellore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News February 7, 2025

ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்ட பயணி கைது

image

கே.வி.குப்பம் தாலுகா காவனூர் மார்க்கம் வழியாக சென்ற விரைவு ரயிலில் பயணித்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்ட்டுள்ளார். கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி தப்பியவரை, போலீசார் கைது செய்துள்ளனர். காயமடைந்த கர்ப்பிணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 7, 2025

வேலூர் நாளை இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நாளை (பிப் 8) வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள ராஜேஸ்வரி எஸ்டேட் வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் 13 வயது முதல் 21 வயது வரை உள்ள இளம் வீரர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க கவுரவ செயலாளர் ஸ்ரீதரனை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!