India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் தெருவில் கடந்த மாதம் நடந்த பொங்கல் விழா தகராறில் வசந்தகுமார் என்பவர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சிவா, கணேஷ் ஆகியோர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மதிவாணன் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (9.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்றுமுன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி புதிய மாவட்ட தலைவராக தசரதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி முன்னிலையில் இன்று (பிப்ரவரி 9) வேலூர் காட்பாடி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
வேலூர் மாவட்டம் காட்பாடி கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளியதில் படுகாயம் அடைந்த பெண் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பெண்ணின் முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் மேலும் மூன்று லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் வருகிற பிப்ரவரி 11-ம் தேதி (செவ்வாய் கிழமை) வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப்பணிகளையும் ஒற்றை சாளர முறையில் பயன்பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் இன்று பிப்ரவரி 9 முதல் 20-ம் தேதி வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று (பிப் 8) நடந்தது. இதில் எஸ்பி மதிவாணன் தலைமை தாங்கினார். சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். போதை பொருட்கள் விற்பனை, கடத்தலை தடுக்க சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பேசினார்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் இன்று (பிப்ரவரி 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டது. இதில், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் தொடர்பு எண் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
தமிழக முழுவதும் கிராமப் புறங்களைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு இன்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 9ஆம் வகுப்பு பயிலும் கிராமப் புறங்களைச் சேர்ந்த 2,336 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட 9 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். காட்பாடி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மகாலிங்கம் ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.